உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரு நாய்கள் கடித்து 2 வயது குழந்தை பலி

தெரு நாய்கள் கடித்து 2 வயது குழந்தை பலி

கார்கோன், மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், அங்கு உள்ள மங்ருல் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிகிறார். பணியிடத்திலேயே தன் மனைவி மற்றும் 2 வயது மகளுடன் தங்கிஉள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார் சஞ்சய். அந்த சமயத்தில் அவர்களது மகள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் அங்கு சுற்றித்திரிந்த நாய்கள், குழந்தையை கடித்து குதறி, 100 மீட்டருக்கு அப்பால் இழுத்துச் சென்றன. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், நாயிடம் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையின் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் நாய்கள் ஆழமாக கடித்ததற்கான காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி