மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
ஏரோசிட்டி:இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு மதுக்கடைகளை திறக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை 2021-22ல் உருவாக்கியது. புதிய கொள்கை உருவாக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்ததையடுத்து, புதிய கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ரத்து செய்தது.இதையடுத்து நகரத்தில் சில்லறை மது விற்பனை மாநில அரசின் நான்கு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் வருகைப்பிரிவில் மதுக்கடையைத் திறக்க டில்லி அரசாங்கத்தின் ஏஜென்சியான டி.சி.சி.டபிள்யூ.எஸ்., எனும் டில்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடி லிமிடெட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதேபோல் முதலாவது முனையத்தின் புறப்பாடு பகுதியிலும் மற்றொரு மதுக்கடையைத் திறக்க மாநில அரசின் ஏஜென்சி திட்டமிடுகிறது. அடுத்த மாதத்திற்குள் இதற்கான பணிகள் நிறைவடையும்.விமான நிலையத்தின் உள்நாட்டு முனையங்களில் ஆறு பிரீமியம் மதுபானக் கடைகள் இருந்தன. அவை முன்பு தனியாரால் நிர்வகிக்கப்பட்டன.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
6 hour(s) ago