உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 

குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 

சஞ்சய்நகர் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனை ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்தார்.பெங்களூரு, சஞ்சய்நகர் நாகஷெட்டிஹள்ளியில் வசித்தவர் மூர்த்தி, 45. ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சரணப்பா, 46. ரவுடி. இவர் மீது சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று அதிகாலை 1:00 மணியளவில் நாகஷெட்டிஹள்ளி காலி நிலத்தில் வைத்து, மூர்த்தியும், சரணப்பாவும் மது குடித்தனர்.குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆட்டோவில் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து, மூர்த்தியை, சரணப்பா தாக்கினார். பலத்த வெட்டு காயம் அடைந்த மூர்த்தி, பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து சரணப்பா தப்பிச் சென்றார். நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு கொலை நடந்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள சரணப்பாவை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை