உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிப்டாப் உடை அணிந்து நுாதன கொள்ளை முயற்சி மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

டிப்டாப் உடை அணிந்து நுாதன கொள்ளை முயற்சி மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

உடுப்பி: குந்தாபூரில் டிப்டாப் உடை அணிந்து, காரில் வந்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.உடுப்பி மாவட்டம், குந்தாபூரைச் சேர்ந்தவர் கவிதா, கோட்டா போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டு உள்ளதாவது:ஜூலை 25ம் தேதி காலையில், எங்கள் வீட்டின் கதவை யாரோ தட்டுவது போன்று இருந்தது. சிறிது நேரத்தில் சென்று பார்த்தபோது யாரும் இல்லை. எங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து, அதை பொருத்தியவர்களிடம் கேட்டேன்.அதை ஆய்வு செய்த அந்நிறுவன ஊழியர்கள், கேமராவில் பதிவான வீடியோ ஒன்றை அனுப்பினர். அதில், ஜூலை 25ம் தேதி அன்று, காலை 8:30 மணிக்கு கார் ஒன்று, வீட்டின் முன் நின்றது. அதில் இருந்து டிப்டாப் உடை அணிந்து இறங்கிய நான்கைந்து பேர், கேட்டின் கதவை தட்டினர். அவர்களுடன் போலீஸ் சீருடை அணிந்த ஒருவரும் வந்துள்ளார்.யாரும் வராததால், கேட் ஏறி வளாகத்துக்குள் குதித்து, வீட்டின் கதவு, ஜன்னலை திறக்க முயற்சித்தனர். அதுவும் முடியவில்லை. இதனால் அங்கிருந்து, அவர்கள் வந்த காரிலேயே புறப்பட்டுச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. வந்தவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, போலீசார், மர்ம நபர்கள் வந்த காரை தேடினர். அந்த கார், சஸ்தான் சுங்கச்சாவடி வழியாக செல்வதை தவிர்த்து, பர்கூர் சாலை வழியாக சென்றுள்ளது. அதேவேளையில், காரின் பதிவு எண்களையும் அகற்றியது தெரியவந்தது.மாவட்ட எஸ்.பி., அருண் கூறுகையில், ''அந்த வீட்டின் உரிமையாளர் மீது ஏற்கனவே, பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அத்துடன் சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.� வீட்டின் கேட் முன் டிப்டாப் உடையணிந்து அரசு அதிகாரிகள் போன்று நின்றிருந்த மர்ம நபர்கள். � வீட்டின் வளாகத்துக்குள் குதித்துச் சென்ற மர்ம நபர்கள். இடம்: உடுப்பி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ