பாட்னா: போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27, துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.போஜ்புரி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அம்ரிதா பாண்டே, 27, கடந்த 2022ல், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, சந்திரமணி ஜன்கத் என்பவரை திருமணம் செய்தார். மும்பையில் வசித்து வந்த நிலையில், சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக, பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு அவர் சென்றார்.திருமணம் முடிந்ததும், கணவர் சந்திரமணி ஜன்கத் மும்பை திரும்பிய நிலையில், அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க அம்ரிதா பாண்டே முடிவு செய்தார். அதன்படி, பாகல்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, கடந்த 27ம் தேதி, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீப காலமாக, தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால், அம்ரிதா பாண்டே மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்கொலை செய்வதற்கு முன், 'வாட்ஸாப்'பில், 'அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது. நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்' என்ற வாசகத்தை, அவர் ஸ்டேட சாக வைத்திருந்தார். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.