உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசனவாயில் காற்றை செலுத்தியதால் வாலிபர் பலி

ஆசனவாயில் காற்றை செலுத்தியதால் வாலிபர் பலி

சம்பிகேஹள்ளி, : ஆசனவாயில் வழியே உடலுக்குள் காற்றை செலுத்தியதால், வயிறு வீங்கி குடல் வெடித்து, வாலிபர் உயிரிழந்தார்.விஜயாபுராவை சேர்ந்தவர் யோகேஷ், 28. பெங்களூரு தனிசந்திராவில் தங்கி இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் வசிக்கும் நண்பர் முரளியை, 28, பார்க்க பைக்கில் சென்றார்.பைக் சர்வீஸ் சென்டரில், மெக்கானிக்காக முரளி வேலை செய்கிறார். பைக்கிற்கு காற்று அடைக்க பயன்படுத்தப்படும், ஏர் கம்பிரஷரை வைத்து, யோகேசும், முரளியும் ஒருவர் மீது ஒருவர், காற்று அடித்து, விளையாடிக் கொண்டு இருந்தனர்.இந்த சந்தர்ப்பத்தில் யோகேஷின் ஆசனவாயில் ஏர் கம்பிரஷர் மூலம், முரளி காற்று அடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வயிறு வீங்கியது. மயக்கம் போட்டு விழுந்தார்.அதிர்ச்சி அடைந்த முரளி, யோகேஷை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் வயிறு வீங்கியதில் குடல் வெடித்து, யோகேஷ் பரிதாபமாக இறந்தார்.யோகேஷ் பெற்றோர் அளித்த புகாரில், சம்பிகேஹள்ளி போலீசார், முரளியை கைது செய்தனர். விளையாட்டு வினையாகும் என்ற சொல்லுக்கு ஏற்ப, விளையாட்டாக ஆசனவாயில் அடித்த காற்று, வாலிபர் உயிரை பறித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை