உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சத்தீவில் விமான தளம்; சீனாவுக்கு முட்டுக்கட்டை

லட்சத்தீவில் விமான தளம்; சீனாவுக்கு முட்டுக்கட்டை

புதுடில்லி : அரபி கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக, லட்சத்தீவில் இரு விமான தளங்களை கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.தென் சீன கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், சீனாவின் சவாலை சமாளிக்கும் வகையில், https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lg1kxsm7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் மினிகாய் தீவில் புதிய விமான தளமும், அகாட்டி தீவில் தற்போது இருக்கும் விமான தளத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விமான தளங்கள், ராணுவ தேவை மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, போர் விமானங்கள், ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும ராணுவ ட்ரோன்கள் ஆகிய அனைத்திற்கும் பயன்படும் வகையிலும் கட்டமைக்கப்பட உள்ளது.இந்த விமான தளங்களின் முழு கட்டுப்பாடும், இந்திய விமானப்படையிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அரபி கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கவும், லட்சத்தீவில் சுற்றுலாவை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 20, 2024 18:07

fantastic


மோடி தாசன்
ஜூலை 20, 2024 11:36

மோடி சர்க்கார்.


Mahendrakumar R
ஜூலை 20, 2024 10:52

பிரதமர் மோடி அரசு நன்றாக செயல்படுகிறது இது மக்களுக்கான அரசு ராணுவ துறையில் முன்னேற்றத்துடன் செயல்படுகிறது


chennai sivakumar
ஜூலை 20, 2024 09:17

நாட்டின் பாதுகாப்பை பிஜேபி உறுதி செய்து கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே விமான தளம் அமைத்து சீனாவிற்கு செக் கொடுக்கிறது. இண்டியா கூட்டணிக்கு நாட்டு பாதுகாப்பு பற்றி துளிக்கூட கவலை இல்லை. நமது மக்களும் நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலை படுவது இல்லை.


Anand
ஜூலை 20, 2024 10:35

இந்தியா கூட்டணி நாட்டை பற்றி துளி கூட கவலைப்படாது, அக்கூட்டணியின் தலைமையே ஒரு அந்நிய தீயசக்தி, அது சீனாவிடம் போட்ட மறைமுக ஒப்பந்தம் என்னவென்று இதுவரையில் தெரியவில்லை,


baskaran s
ஜூலை 20, 2024 11:44

ஆம் தங்கள் கருத்து முற்றிலும் உண்மை


veeramani
ஜூலை 20, 2024 08:57

தற்போதுதான் பாரதம் வலிமையான ஓ ரூ தேசமாக உள்ளது. இந்தியபெருங்கடல்.. பெயரிலேயே உள்ளது இந்த பெருங்கடல் இந்தியாவின் அழுதைக்கு உட்பட்டது. எவனாவது இந்திய பெ ருங்கடலில் சொந்தம் கொண்டாடி வருவானேயானால் நாட்டின்மீது ஏவுகணையை வீசுவோம். அராபியன் கடலிலும் இதே நிலைப்பாடுதான்.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:09

சிறப்பு. பாஜக அரசு முழு மூச்சில் இந்தியாவை பலமுள்ள நாடாக்க முயல்கிறது. ஆனால் நீதித்துறை இன்னும் பின்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது. சிறிய வழக்குக்களைக்கூட பைசல் செய்ய துப்பில்லாமல் அரசாங்கத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறது.


rama adhavan
ஜூலை 20, 2024 04:32

சரியான திட்டம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ