உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு: சவுமியா சாமிநாதன் கவலை

ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு: சவுமியா சாமிநாதன் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.உ.பி, மேற்குவங்கம், தமிழகம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொளுத்தும் வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. சாலைகளில் வெயில் அனலாக தகித்ததால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் நகரின் பல்வேறு முக்கிய ரோடுகளில் கூட மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டு வருகிறது.

கடுமையாக பாதிப்பு

வெப்ப அலை தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: ஒட்டுமொத்த ஆசிய மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Prem Kumar
மே 02, 2024 16:50

Everyone knows very well that there is high heat waves in Asia But, can someone tell some fruitful solution


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 10:52

இன்னும் இந்த அம்மாவும் உலக சுகாதார அமைப்பின் தலைவரும் கோரோணா எப்படி வந்தது எப்படி பரவியது யார் அதற்கு காரணம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்காமல் இரகசியம் காத்து வருகின்றனர்


Nagar
மே 01, 2024 21:05

இரசாயன விவசாயம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு, மாடு சார்ந்த இயற்கை இயற்கை விவசாயத்தை இந்தியா முழுவதும் பின்பற்றினால், புவி வெப்பமயமாதல் % குறையும்


Jai
மே 01, 2024 18:32

என்ன வெயில் என்ன வெயில்? தாங்க முடியவில்லை. வரும் மழை சீசனில் ஒரு மரமாவது வைத்து விட வேண்டும்.


mahalingam
மே 01, 2024 16:40

இது எப்ப சரியாகும்


அப்புசாமி
மே 01, 2024 16:39

மூவாயிரம் அடி தோண்டி தண்ணீர் எடுத்து விவசாயம் செழிக்க வைத்தாரே. இதுக்கு மேலேயும் தோண்டுனா தண்ணி வருமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை