உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக பக்தர்கள் மீது மஹா.,வில் தாக்குதல்

கர்நாடக பக்தர்கள் மீது மஹா.,வில் தாக்குதல்

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய கர்நாடக பக்தர்கள் மீது, மஹாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பெலகாவி அருகே துருமுரி கிராமத்தைச் சேர்ந்த 35 பேர், ஒரு லாரியில் மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோவிலுக்கு நேற்று காலை சென்றனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினர். டிரைவர் பரசுராம் வழி தெரியாமல் மாலகன் என்ற ஊருக்குள் சென்று விட்டார்.அந்த ஊருக்குள் செல்லும் சாலை குறுகலாக இருந்தது. லாரிக்கு பின்னால் இரண்டு கார்கள் வந்தன. வழி கேட்டு கார்களின் டிரைவர்கள் ஹாரன் அடித்தனர். இதனால் லாரி டிரைவர் பரசுராம், கார் டிரைவர்களுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள் லாரி டிரைவர் பரசுராம், லாரிக்குள் இருந்த சுரேஷ்குமார், பரசுராம் ஜாதவ் உட்பட 10 பேரை தாக்கியுள்ளனர்.காயமடைந்த 10 பேரும் மீரஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.- -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை