உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.17 லட்சம் மோசடி  செய்தவர் மீது வழக்கு

ரூ.17 லட்சம் மோசடி  செய்தவர் மீது வழக்கு

நெலமங்களா: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தியின், முன்னாள் பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பெங்களூரு ரூரல் நெலமங்களா ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாசமூர்த்தி. இவரிடம் பாதுகாவலராக வேலை செய்தவர் வெங்கடேஷ், 43. இவருக்கும், நெலமங்களாவின் சுனந்தா, 47 என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.பெண்ணின் மகள்கள் இருவரும் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடினர். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல தவணைகளில் சுனந்தாவிடம் இருந்து, வெங்கடேஷ் 17 லட்சம் ரூபாய் வாங்கினார்.ஆனால் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தார். இது குறித்து நேற்று நெலமங்களா போலீசில், சுனந்தா புகார் செய்தார். வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை