உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களுக்கு சலுகை பஸ் பாஸ்

மாணவர்களுக்கு சலுகை பஸ் பாஸ்

பெங்களூரு: பயணக் கட்டணத்தில் சலுகை கிடைக்க வகை செய்யும், பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கும்படி, மாணவர்களுக்கு பி.எம்.டி.சி., அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:மாணவர்களுக்கு ஜூன் 1 முதல், கட்டண சலுகைக்கான பஸ் பாஸ் வழங்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இன்று (நேற்று) முதல் விண்ணப்பித்து, பஸ் பாஸ் பெறலாம். https://sevasindhu.karnataka.gov.inஎன்ற இணையதளத்தில், விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெங்களூரு ஒன், மெஜஸ்டிக், கெங்கேரி பஸ் டெர்மினல், சாந்திநகர் பஸ் டெர்மினல், ஹொஸ்கோட், எலக்ட்ரானிக் சிட்டி டிப்போ - 19, ஆனேக்கல் பஸ் நிலையங்களில், காலை 8:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை பஸ் பாஸ்கள் வழங்கப்படும்.'சக்தி' திட்டத்தின் கீழ், மாணவியர் பி.எம்.டி.சி.,யின் சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். கூடுதல் விபரங்கள் தேவை என்றால், பி.எம்.டி.சி., இணையதளத்தில் பார்க்கலாம். அல்லது கால் சென்டர் எண் 080 - 2248 3777ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை