உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவர்களுக்கு தகுதி இல்லை: ஜெகதீஷ் ஷெட்டர் 

காங்., தலைவர்களுக்கு தகுதி இல்லை: ஜெகதீஷ் ஷெட்டர் 

பெலகாவி : ''என்னை விமர்சிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி இல்லை,'' என்று, பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் பொங்கி எழுந்து உள்ளார்.பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று அளித்த பேட்டி:தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், பெலகாவியில் வந்து போட்டியிடுகிறார். பெலகாவி பா.ஜ.,வில் தகுதியான ஆட்களே இல்லையா என்று, காங்கிரசார் கூறி வருகின்றனர். என்னை பற்றியும் விமர்சித்து பேசுகின்றனர்.டில்லியை சேர்ந்த அஜய் மக்கன், ராஜ்யசபா எம்.பி.,யாக கர்நாடகாவில் இருந்து ஏன் போட்டியிட்டார். ராகுல் வயநாட்டில் இருந்து ஏன் போட்டியிடுகிறார். அவர்கள் வெளியாட்கள் இல்லையா? என்னை விமர்சிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.என் 30 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை பார்த்து, பெலகாவி வேட்பாளராக பா.ஜ., அறிவித்து உள்ளது. என் குடும்பம் பல ஆண்டுகளாக பா.ஜ.,வுடன உள்ளது. இடையில் நான் காங்கிரசில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா அழைப்பின்பேரில், கட்சிக்கு திரும்பினேன்.முதல்வர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பெலகாவி வளர்ச்சிக்கு நிறைய பங்களிப்பு கொடுத்து உள்ளேன். இங்கு வீடு கட்டி வசிப்பேன்.நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து காட்டுவேன். மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆக வேண்டும் என்று, நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அவர் செய்த சாதனைகளை முன்வைத்து, மக்களிடம் ஓட்டு கேட்போம். இந்தியாவை உலக குருவாக, பிரதமர் மோடி மாற்றி உள்ளார்.பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்த மோடி, அனைத்து வகுப்பினரின் நலனுக்காக உழைத்து உள்ளார். காங்கிரஸ் அரசு ஊழலில் சிக்கி உள்ளது. வாக்குறுதி திட்டங்களால் நிர்வாக இயந்திரம் முடங்கி உள்ளது. வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு பின் காங்., ஆட்சி கவிழும்.அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் தேர்தலுக்காக கழுத்தில் காவி துண்டு அணிகின்றனர். ஆனால் முதல்வர் சித்தராமையா, காவி தலைப்பாகை அணிய மறுக்கிறார். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளியுடன், எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை