உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்

கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்

புதுடில்லி, நாடு முழுதும் ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் கலெக்டர்கள் 15 பேரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இது அப்பட்டமான மிரட்டலாகும். பா.ஜ., எவ்வளவு அவநம்பிக்கையுடன் உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஆனால், அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடாது; அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். தேர்தலில் மக்களின் விருப்பமே வெல்லும். வரும் 4ம் தேதி பா.ஜ., அமித் ஷா, மோடி ஆகியோர் வெளியேறுவர். இண்டியா கூட்டணி வெல்லும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை