உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகாவில் காங்., வெற்றி பெறும்: அமைச்சர் எச்.கே.பாட்டீல்

‛கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகாவில் காங்., வெற்றி பெறும்: அமைச்சர் எச்.கே.பாட்டீல்

ஹாவேரி : ''கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகாவின் 12 லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்,'' என, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்டேன். இவ்விரு பகுதியிலும் உள்ள 12 லோக்சபா தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.இதற்கு காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்களே காரணம். முன்னர், திருவிழா கொண்டாட பெண்கள் கடன் வாங்குவர். ஆனால் இப்போது யாரும் கடன் வாங்குவதில்லை. ஆனால் குமாரசாமியே பெண்கள் குறித்து அவதுாறாக பேசுகிறார். பெண்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரின் அரசியல் எதிர்காலம் ஆபத்தில் முடியும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை