உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பு மஹாராஷ்டிரா கர்ப்பிணி பலியால் அம்பலம்

தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பு மஹாராஷ்டிரா கர்ப்பிணி பலியால் அம்பலம்

பாகல்கோட்: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி ஒருவர், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மஹாராஷ்டிரா போலீசாரால், கர்நாடகாவில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்பு வெளிச்சத்துக்கு வந்தது.மஹாராஷ்டிரா மாநிலம், கொல்லாபுராவை சேர்ந்தவர் சோனாலி, 33. இவருக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மூன்றாவதாக கருவுற்றார். மீரஜின் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்தது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், கருவை கலைக்க சோனாலியின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.அப்போது கர்நாடகா, பாகல்கோட்டின், மஹாலிங்கபுராவில் வீடு ஒன்றில் கவிதா என்பவர் கருக்கலைப்பு செய்வது தெரிந்தது. இடைத்தரகர் மாருதி என்பவர் மூலமாக, கவிதாவை தொடர்பு பேசினர். கருக்கலைப்பு செய்ய மே 27ல், காலை 9:30 மணிக்கு சோனாலியை அவரது உறவினர் விஜய்கவுலி காரில் அழைத்து வந்தார். அவருடன் இடைத்தரகர் மாருதியும் வந்திருந்தார்.கவிதா, தன் வீட்டிலேயே சோனாலிக்கு கருக்கலைப்பு செய்தார். சிறிது நேரத்தில் அவருக்கு தலை சுற்று ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். ரத்தப்போக்கும் அதிகமானது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, கவிதா கூறியதால் சோனாலியை காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். மஹாராஷ்டிரா எல்லையில், மீரஜ் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள் காரை நிறுத்தி சோதனையிட்டபோது, பெண் இறந்து கிடப்பது தெரிந்தது. விசாரித்தபோது, நடந்த விஷயத்தை மாருதியும், விஜய் கவுலியும் விவரித்தனர்.அவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். சாங்க்லி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. மஹாராஷ்டிர போலீசார், பாகல்கோட், மஹாலிங்கபுராவுக்கு வந்துள்ளனர். கவிதாவை கைது செய்ய தயாராகின்றனர்.மஹாலிங்கபுராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கவிதா உதவியாளராக பணியாற்றினார். இவர் மருத்துவமனையில், கருக்கலைப்பு நடக்கும்போது, எப்படி செய்கின்றனர் என்பதை கவனித்தார். அதன்பின் தன் வீட்டிலேயே, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து பணம் சம்பாதித்தது, விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை