உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் முதல் செமி கண்டக்டர் ஆலை: அசாமில் டாடா குழுமம் பூமிபூஜை

நாட்டின் முதல் செமி கண்டக்டர் ஆலை: அசாமில் டாடா குழுமம் பூமிபூஜை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாகிரோட்: நாட்டின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், அசாமில் பூமி பூஜையுடன் துவங்கின.வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு மோரிகான் மாவட்டத்தின் ஜாகிரோட்டில் 27,000 கோடி ரூபாய் முதலீட்டில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை மற்றும் சோதனை மையம் அமைகிறது.

பூமி பூஜை

அனைத்து வகை மின்னணு சாதனங்களும் இயங்குவதில்,'சிப்' எனப்படும் செமி கண்டக்டர் முக்கியமானதாகும். உள்நாட்டிலேயே இவற்றை தயாரிக்கும் நோக்கத்தில் அதற்கான முயற்சிகள் துவங்கின. இதன்படி, நாட்டின் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை அசாமில் அமைகிறது. கடந்த மார்ச், 13ம் தேதி பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிலையில், இந்த ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நேற்று பூமி பூஜையுடன் முறைப்படி துவங்கின. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.டாடா ஆலையின் முப்பரிமாண மாடலை திறந்து வைத்து, அசாம் முதல்வர் கூறியதாவது:இந்த தொழிற்சாலை செயல்படத் துவங்கும் போது, அசாமின் தொழில் வளர்ச்சி மேலும் விரிவடையும். புதிய வளர்ச்சிக்கான சகாப்தம் துவங்கும். இந்த நாள், அசாம் மக்களுக்கு பொன்னான நாள். இந்த ஆலையால், ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஏற்கனவே, 1,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழகத்தின் ஒசூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆலையின் வாயிலாக, வடகிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

டாடா குழுமம்

ஒரு காலத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தபோதே, அசாமில் முதலீடு செய்வதற்கு டாடா குழுமம் முன் வந்தது. தற்போது இம்மாநில மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு இந்த ஆலை அமைக்க முன்வந்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.27,000 பேருக்கு வேலை!அசாமில் 27,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள இந்த செமி கண்டக்டர் தொழிற்சாலையால், 15,000 பேருக்கு நேரடியாகவும், 12,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், 2025ம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து, உடனடியாக உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளோம்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஆக 04, 2024 06:32

கம்பீரமாக நிற்கும் எங்கள் கல்லூரித்தோழர் தமிழகத்துக்கு பாலூற்றி விட்டதுதான் மகா சோகம். ஒருவேளை சீனா சொன்னால் திராவிடர்கள் என்ன விதமான கெடுதல்களை உம்: விளம்பரத்தில் சீன ராக்கெட் படம் போடுவது கூட செய்வார்களா என்ற உண்மையை புரிந்திருக்கலாம்.


Visu
ஆக 04, 2024 04:17

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டம் ஏனோ புயலை போன்று திசைமாறி போனது


தமிழ்நாட்டுபற்றாளன்
ஆக 04, 2024 06:25

எல்லாம் மோடியின் தமிழ் நாடு பற்று தான் காரணம்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை