மேலும் செய்திகள்
முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
2 minutes ago
5,945 இந்தியர்கள் வெளியேற்றம்
4 minutes ago
பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். மக்களின் கஷ்டம் அவருக்கு புரியவில்லை. கண்ணிருந்தும் பார்வையற்றவராக இருக்கிறார்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் குற்றம்சாட்டினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மக்கள் கொதித்து எழும் முன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பால் விலையை உயர்த்துவதன் மூலம், மக்களுக்கு மற்றொரு சூடு போட்டுள்ளது. விலை உயர்வுக்காக, கூடுதலாக 50 மி.லி., பால் வழங்குவதாக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் கூறுகின்றனர். இதற்காக இரண்டு ரூபாயை அதிகரித்துள்ளனர்.பால் விலையை உயர்த்தும்படி, யாராவது அரசிடம் வேண்டுகோள் விடுத்தனரா. மக்களுக்கு எதிரான முடிவை அரசு ஏன் எடுக்கிறது. பால் விலையை உயர்த்தியதால், ஹோட்டல்களில் காபி, டீ விலையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுபானம் விலையை உயர்த்தினர். கருவூலத்தை நிரப்பும் நோக்கில், விலையை உயர்த்துகின்றனர்.கர்நாடகாவுக்கு 20 லட்சம் டன் தீவனம் தேவைப்படுகிறது. ஆனால், 8 லட்சம் டன் தீவனம் மட்டுமே வழங்குகின்றனர். இந்த அரசால் கால்நடைகளுக்கு தீவனமும் கொடுக்க முடியவில்லை.சித்தராமையா அரசின் பொறுப்பற்ற முடிவுகளால், மாநில மக்கள் தினமும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். முதல்வர் சித்தராமையா ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். மக்களின் கஷ்டம் அவருக்கு புரியவில்லை. கண்ணிருந்தும் பார்வையற்றவராகவும், காது இருந்தும் செவிடாக இருக்கிறார்.பரவலாக மழை பெய்கிறது. விதைப்பொருள், உரங்களின் விலையை உயர்த்தி உள்ளனர். காய்கறிகள், உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது. வீட்டு வரி, பதிவு கட்டணம் அதிகரித்துள்ளனர். அரசு சொத்துகளை விற்க முற்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
2 minutes ago
4 minutes ago