உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்டீரியாக்களை அழிக்கும் சாண பெயின்டுக்கு டிமாண்ட்

பாக்டீரியாக்களை அழிக்கும் சாண பெயின்டுக்கு டிமாண்ட்

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என, முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளும் மனிதர்களுக்கு பயன்படும். அது போன்று பசுவின் சாணமும், பல விதங்களில் பயன்படுகிறது.ஹிந்து மதத்தில், பசுக்களுக்கு புனிதமான இடம் உள்ளது. பசுவிடம் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். பசுவுக்கு மட்டுமின்றி, அதன் சாணத்துக்கும் அதே அளவு மகத்துவம் அளிக்கப்படுகிறது.பூஜைகள், திருவிழாக்கள், திருமணம் உட்பட, சுப நிகழ்ச்சிகளில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதை இப்போதும் காணலாம்.

வறட்டி

சாணத்தால் தயாரிக்கப்பட்ட வறட்டியை எரித்தால், புனிதமான திருநீறாக மாறுகிறது. வறட்டி பல தேவைகளுக்கு பயன்படுகிறது. கிராமங்களில் இன்றும் கூட, அடுப்பு எரிக்க வறட்டி பயன்படுத்தப்படுகிறது. சாணத்தை வைத்து, விளக்கு, கலை பொருட்கள், அலங்கார பொருட்கள், கடவுள் சிலைகள் என, பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சாணம் பயன்படுத்தி, பெயின்ட் தயாரிக்கப்படுகிறது.தட்சிண கன்னடா, மங்களூரின் ஹளெயங்கடி கிராமத்தில் குடிசை தொழிலில், பசுவின் சாணத்தால் தயாரிக்கும் இயற்கையான பெயின்ட் மிகவும் பிரபலமாக உள்ளது. 'சன்னிதி பிரக்ருதி' என்ற பிராண்ட் பெயரில், மார்க்கெட்டில் விற்கப்படும் பெயின்ட் இயற்கையான நிறம் கொண்டதாகும். பூஞ்சைகள், பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. எந்த வாசனையும் இல்லாதது. செலவும் குறைவு. இந்த தொழிற்சாலையை அக்ஷதா என்பவர் நடத்துகிறார்.

டிமாண்ட்

சிறிய அளவில் குடிசை தொழிலில் தயாரிக்கப்படும், சாண பெயின்டுக்கு கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கிருமிகளை அழிப்பதுடன், கதிர் வீச்சை தடுக்கிறது. வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கிராமத்துக்கு வந்து சன்னிதி பிரக்ருதி பெயின்ட் வாங்குகின்றனர்.இதுதொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் அக்ஷதா கூறியதாவது:கடந்த 2022ல், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா நேஷனல் ஹேண்ட்மெய்டு பேப்பர் இன்ஸ்டியூட்டில், நடந்த பயிற்சியில் பங்கேற்றேன். இங்கு பயிற்சி பெற்ற பின், சொந்தமாக தொழில் துவங்கினேன். டபுள் - டிஸ்க் ரிபைனர் பயன்படுத்தி, பசுவின் சாணம் பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் வெவ்வேறு வழிகளில், பெயின்ட் தயாரிக்கப்படுகிறது.அபாயமான எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை. இயற்கையான நிறம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிலுக்கு 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். உள்ளூர் விவசாயிகளிடம் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து, சாணம் வாங்குகிறோம்.தொழிற்சாலைக்கு தேவையான உபகரணங்கள், தமிழகத்தின் கோவையில் இருந்து வாங்கப்பட்டன.

ஒரு லிட்டர் ரூ.190

ஒரு லிட்டர் சாண பெயின்ட் விலை, ஜ.எஸ்.டி., சேர்த்து, 190 ரூபாயாகும். ஆரம்பத்தில் இப்பகுதியின், சில வீடுகள், கோவில்களுக்கு இலவசமாக பெயின்ட் வழங்கினோம். மக்கள் இதை பயன்படுத்திய பின், வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததை உணர்ந்தனர். அதன்பின் விற்பனை அதிகரித்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vee srikanth
ஜூன் 10, 2024 15:28

have you used same brand??


Ramesh Sargam
ஜூன் 09, 2024 13:04

சிறப்பு.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 09:53

கோமிய சங்கி என்றெல்லாம் கிண்டல் செய்தவர்கள் இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் ...


cbonf
ஜூன் 09, 2024 09:23

எனக்கு மும்பையில் இரண்டு வீடுகள் உள்ளன. இரண்டு வீட்டிலும் நான் கோபர் பெயிண்ட் பசு சாணியில் இருந்து தயாரிக்கப்பட்ட அடித்தேன். அதன் விளைவாக கோடையில் வெப்பத்தாக்கு இல்லாமலும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் உள்ளது. கொசு தொல்லை இல்லை. எல்லோரும் பசு சாணியில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்ட் ஐ உபயோகியுங்கள்


Mohan
ஜூன் 09, 2024 07:56

ரொம்ப நன்றி மேடம் இயற்கையான முறை பெயிண்ட் தயாரிப்பதற்கு புது முயற்சி எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். இங்கே தமிழ்நாட்டில் ஒரு முன்னாள் எம்.பி. கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு பாஜக ஆளும் சில மாநிலங்களை "கோமூத்ர, கோபர் ஸ்டேட்ஸ்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். மாட்டு சாண பெயிண்ட் கண்டுபிடித்த உங்கள் சாதனை பாராட்டுக்குரியது. வாழ்க நீவிர்


K.Muthuraj
ஜூன் 09, 2024 10:56

நம்மிடம் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தேவநேயப்பாவாணர் நூலகத்தில் ரஷ்யா நிதியளிப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட சில அறிவியல் நூல்கள் படிக்க நேர்ந்தது. புத்தகம் பழமையானதாக இருந்தாலும்-நேரு காலத்தவை மிகத்தரமானதாக அழகுத்தமிழில் அச்சிடப் பட்டிருந்தது. அதில் விலங்கினத்தில் பசு மாட்டின் சாணம் கோமியம் மற்றும் பால் மட்டுமே மக்களுக்கு எந்த தீங்கும் செய்யாத ensym நீண்ட கால உபயோகங்கள் செய்தாலும் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான காரணங்களும் விளக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியர்கள் எவ்வாறு உணர்ந்து கொண்டிருந்தனர் என்று புரியவில்லை. பசுவினை முறையாகப்பராமரிப்பதில் மக்களிடம் உள்ள குறைபாடுகளே பசுவின் உபயோகத்தினை பற்றிய மற்றவர்களின் எதிர்மறை கண்ணோட்டம். மேலும் மனிதர்களிடத்தில் மூன்றாம் கண் ஒன்று இருந்தால் அதன் மூலமும் பார்வைத்திறனை மூளையால் அறிந்து கொள்ளும் புலநுட்பம் நெற்றிக்கண் புருவ மத்தியில் இருப்பதனை பற்றிய விளக்கம். அதனாலேயே நாம் நெற்றியின் மைய்யத்தில் சந்தானமோ குங்குமமோ இட்டு அதனை குளிர்வித்துக்கொள்ளுதல் செய்கின்றோம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை