உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்கொடுமை,பெண் கடத்தல் வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

பாலியல் வன்கொடுமை,பெண் கடத்தல் வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

பெங்களூரு:வேலைக்கார பெண்ணை கடத்தி, அடைத்து வைத்திருந்த வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,வுமான ரேவண்ணாவை, பெங்களூரு சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.ரேவண்ணா மகன் பிரஜ்வல் 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும் 3000 ஆபாச வீடியோ வெளியான வழக்கில் கர்நாடக மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தது. பிரஜ்வல் மற்றும் ரேவண்ணா மீது 3 பெண்கள் பாலியல் புகார் கொடுத்து உள்ளனர். பாலியல் வன்கொடுமை, பெண்ணை கடத்திய வழக்கு போன்றவற்றில் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது. இதனிடையே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து அவர் கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு போலீசார் இறங்கினர். பெங்களூரு பத்பநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா இல்லத்தில் வைத்து ரேவண்ணா கைது செய்யப்பட்டார். மேலும் ஹாசன் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா வீட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அழைத்து வந்து சிறப்பு புலானய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

ரேவண்ணா கைது ஏன்?

பிரஜ்வல் மீதான பாலியல் வன்கொடுமை ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பாலியல் புகாருக்கு ஆளான பணிபெண்ணை கடத்தியதாகவும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்ய்பட்டது. கடத்தப்பட்ட பெண்ணின் மகன் தாயை மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்திருந்தார்.ரேவண்ணாவின் உதவியாளர் வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு போலீசார் மீட்டனர்.தொடர்ந்து ரேவண்ணா வீட்டிலும் சிறப்பு புலானய்வு போலீசார் சோதனை நடத்தினர்.

தேவகவுடா வீட்டில் பதுங்கல்

இந்நிலையில் தனது தந்தை தேவகவுடா முன்னாள் பிரதமர் என்பதால் போலீசார் வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்து அங்கு பதுங்கி இருந்தாகவும், அவரது நடமாட்டத்தை சிறப்பு போலீஸ் குழுவினர் கவனித்து வந்துள்ளனர். அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோதிடத்தில் நம்பிக்கை

ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட ரேவண்ணா தன்னை கைது செய்ய வந்த போலீசாரை காத்திருக்க செய்து விட்டு ஜோதிடரின் ஆலோசனைப்படியே 6.50 மணிக்கு பின்னர் போலீசாருடன் சென்றுள்ளார். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள எஸ்.ஐ.டி. , அலுவலகத்தில் போலீசார் ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Jai
மே 05, 2024 09:47

முதல் தலைமுறையில் பல கஷ்டங்களை அனுபவித்து பெரும் முயற்சியில் கட்சியை வழிநடத்தி வளர்க்கின்றனர். வாரிசு அரசியல் வந்தவுடன் அந்த நோக்கம் இருப்பதில்லை. முதல் தலைமுறையில் இருந்த கடும் முயற்சி களை கைவிட்டு basic Instinct தலையைத் தூக்குகிறது, சொத்து சேர்ப்பதாக இருக்கட்டும் குடும்பத்தை வளர்ப்பதாக இருக்கட்டும் கண்களில் தென்பட்ட பெண்களை கட்டிலில் தள்ள நினைப்பதாக இருக்கட்டும். இது பெரும்பான்மையான வாரிசு அரசு கட்சிகளான காங்கிரஸ், திமுக மஜதநடக்கிறது. நேற்றைய செய்தியில் வடகொரிய அதிபர் கிங் ஜூன் உடன் 25 பெண்கள் ஸ்குவாட் உள்ளதாக வந்துள்ளது. சின்னங்களுக்கு அடிமையாகி கட்சி கொடிகளுக்கு அடிமையாகி யார் தலைவர் என்ன மாற்றம் கட்சியில் ஆகி உள்ளது என்பதை யோசிக்காமல் பரம்பரை பரம்பரையாக ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும். இவ்வளவு செய்திகள் வந்த பிறகும் மஜத கட்சிக்கு ஓட்டு போடுபவர்கள் மாற்றாமல் போடுவார்கள், பரிதாபம்.


PREM KUMAR K R
மே 05, 2024 05:04

ஒவ்வொரு மே முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாமும் நாடும் உள்ள இன்றைய நிலையை பார்க்கு போது நாம் சிரிக்கும் நிலையிலா இருக்கிறோம் என எண்ண தோன்றுகிறது. பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் முற்றி போய் சில சமயம் ரத்த சம்பந்தமுடையவரையே கொலை செய்யும் அளவிற்கு வெறித்தனம் நமக்குள்ளே எப்படி வந்தது என்பதை எண்ணி அழவே முடிகிறது. ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் தான் பெற்ற குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய தாயோ அல்லது தந்தையோ தானும் தவறான பாதையில் செல்வதுடன் தன் மகனோ மகளோ அதே தவறுகளை செய்ய தூண்டுவதும் அதற்கு துணை நிற்பதையும் பார்க்கும் போது எப்படி நம்மால் சிரிக்க முடியும். மற்றவர்களின் சொத்திலும் செல்வத்திலும் சொகுசு வாழ்க்கை நடத்தி கொண்டு பதவிகளில் இருக்கும் பல சுயநல மிக்க அரசியல்வாதிகள் சமூக சேவை என்ற பெயரில் சமுதாய கேடுகளை துணிந்து செய்து வருவதை பார்க்கும் நிலையில் தள்ளபட்டுள்ள நம்மால் எப்படி சிரிக்க முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாம் வாழ்ந்த உண்மை வாழ்க்கையையும் கடைபிடித்த ஒழுக்க நடைமுறைகளையும் மீண்டும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போக கூடியதை நாமே பார்க்க கூடிய நிலையில் சிரிப்பு எப்படி வரும்? அதிக மன உளைச்சலால் தாங்க முடியாமல் துக்கத்தை இதயத்தில் சுமந்திருக்கும் நாம், நமது கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரை துடைத்து கொள்ள மேலும் இரண்டு கைகளை தர கோரி நம்மை படைத்த இறைவனிடமே அழுது வேண்டுவோம்.


Sree
மே 04, 2024 23:07

தேவகவடா முதல் நிலை குற்றவாளி


Kasimani Baskaran
மே 04, 2024 22:36

கூட்டணியில் இருந்தவரை குற்றம் செய்தது தெரியவில்லை இப்பொழுது சிறப்பு போலீஸ், சிறப்புக்குழு என்றும் அனைத்தும் சிறப்பாகவே நடக்கிறது குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்குவது சிறப்பு


பல்லவி
மே 04, 2024 22:26

தாத்தா மகன் பேரன் பூட்டன்


ஆறுமுகம்
மே 04, 2024 21:53

யாரங்கே... ஒரு முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயார் செஞ்சு அந்த ஆளு ஒரு அப்பாவின்னு நிருபிக்க அளவுக்கு குழப்பி ஆதாரம் இல்லைன்னு விடுதலை செய்யலாம்.


rsudarsan lic
மே 04, 2024 21:19

தெரியாம தான் கேட்கிறேன் ஒரு MLA அல்லது எம்பி குற்றம் சா ட்டப்படும் போது கவர்னர், குடியரசு தலைவர் முதலவர் பிரதமர் இவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டுமெ ன்று அரசியல் அமைப்பு சொல்கிறது? ஓர் அரசு அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட உடன் சஸ்பெண்ட் ஆக்கப்படுகிறார்


rsudarsan lic
மே 04, 2024 21:14

பெருசு தொங்க விட்டுக்கலாம் மூஞ்சிய


rsudarsan lic
மே 04, 2024 21:13

ஒருவழியா பிடிச்சிட்டாங்க


ஆரூர் ரங்
மே 04, 2024 21:06

இந்த சதி மூலம் காங்கிரஸ் கட்சி ஒக்கலிகர் சமூக வாக்குகளை மொத்தமாக இழக்கும். ஏற்கனவே பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியைக் கைவிட்டுவிட்டார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை