உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிம்ஷா ஆற்றில் நீராடிய யானைகள்

சிம்ஷா ஆற்றில் நீராடிய யானைகள்

மாண்டியா: மத்துாரின் ஹோலே ஆஞ்சநேயர் கோவில் அருகில் சிம்ஷா ஆற்றில் ஆறு யானைகள் நீராடியதால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.மாண்டியா மாவட்டம், மத்துாரின் ஹோலே ஆஞ்சநேயர் கோவில் அருகில் சிம்ஷா ஆறு ஓடுகிறது. இதை ஒட்டி வனப்பகுதி அமைந்து உள்ளது. நேற்று காலை காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வந்த ஆறு யானைகள், ஆற்றில் நீராடி பொழுது போக்கின.இதை பார்த்த பக்தர்கள், அப்பகுதியினர் சிலர், ஆபத்தை உணராமல் அருகில் சென்று தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், 'எக்காரணம் கொண்டும் யானைகள் அருகில் செல்ல வேண்டாம். அதற்கு எரிச்சல் ஏற்படும்' என எச்சரித்து, மக்களை அப்புறப்படுத்தினர்.அத்துடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை