உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை வலுப்படுத்த கைகோர்ப்பு இளைஞர்களுக்கு கவர்னர் அழைப்பு

நாட்டை வலுப்படுத்த கைகோர்ப்பு இளைஞர்களுக்கு கவர்னர் அழைப்பு

பெங்களூரு: ''சுதந்திரம் கிடைத்த பின், ஒவ்வொரு துறையிலும், இந்தியா அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில், நாட்டை வலுப்படுத்த, இளைஞர்கள் கை கோர்க்க வேண்டும்,'' என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.பெங்களூரு, ஹெப்பகோடியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லுாரியின் பட்டமளிப்பு விழாவும், தன்னாட்சி அந்தஸ்து நிலை அறிவிப்பு விழாவும் நேற்று நடந்தது. விழாவை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு பட்டம், நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.பின், அவர் பேசியதாவது:கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்பது வெறும் அடையாளம் மட்டுமே அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி, நவீன தொழில்நுட்பம் மூலம் கற்று கொடுத்தல், ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருத்தல் வேண்டும்.தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப, காலா காலத்துக்கு பாட திட்டங்கள் உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி பாட திட்டங்கள் உருவாக்க வேண்டும். சர்வதேச தரத்துக்கு ஏற்ப புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். புதிய வகையில் கற்று கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும். போட்டி உலகில், மாணவர்களை தைரியத்துடன் எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும்.பட்டம் பெற்ற மாணவர்கள், 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்,' 'தன்னிறைவு பாரதம்' உருவாக்குவதில் ஈடுபட வேண்டும். சுதந்திரம் கிடைத்த பின், ஒவ்வொரு துறையிலும், இந்தியா அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், நாட்டை வலுப்படுத்த, இளைஞர்கள் கைகோர்க்க வேண்டும்.வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி தான் திறமையை வளர்க்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், கல்வி பயன்படுகிறது. ஒரு நபரை நிபுணராக மாற்றுவதாக கல்வி தான்.உலகில் பருவ நிலை மாற்றம் தற்போது பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நமது பொறுப்பு. நீர், வனம், காற்றை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை