உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பிரிவுக்கு கவர்னர் உத்தரவு

முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பிரிவுக்கு கவர்னர் உத்தரவு

புதுடில்லி:டில்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, தேசிய தலைநகர் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, ஊழல் தடுப்புப் பிரிவுக்கு டில்லி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, டில்லி தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்”டில்லி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மிகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பொது நலன் கருதி நான் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இந்த விபத்தில் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது.மருத்துவமனயில் ஏற்பட்ட தீ விபத்து அரசுக்கு ஒரு பாடம். எனவே, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள முதியோர் இல்லங்களையும் கண்காணிக்க வேண்டும். டில்லி மாநகரில் 1,190 முதியோர் இல்லங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீத இல்லங்கள் அரசிஅம் பதிவு செய்யாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட சில முதியோர் இல்லங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்.டில்லி முதியோர் இல்லங்கள் பதிவுச் சட்டம், 1953ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிழக்கு டில்லி விவேக் விஹார் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளங் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. இந்த மருத்துவமனை உரிமம் மற்றும் தீயணைப்புத் துறை அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி