மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
சண்டிகர்:“ஹரியானா சட்டசபைத் தேர்தலுக்கு பா.ஜ., தயாராக உள்ளது. மூன்றாவது முறையாகவும் இங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம்,” என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறினார்.ஹரியானா சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ல் நடத்தப்பட்டு, அக்., 4ல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் அறிவித்தது.இந்நிலையில், ஹரியானா அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின், முதல்வர் நயாப் சிங் சைனி நிருபர்களிடம் கூறியதாவது:ஹரியானா சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தயாராகவே இருந்தது. தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறேன். மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம். எந்த பாரபட்சமும் இன்றி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பணிகளை பா.ஜ., செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் அடிப்படையில் ஹரியானா புதிய உயரங்களை எட்டியுள்ளது. அதேநேரத்தில் பொய் பேசி வரும் காங்கிரஸ், ஹரியானா மாநில மக்களுக்கு செய்த பணிகளை விளக்க வேண்டும். காங்கிரசின் பொய்களுக்கு ஹரியானா மக்கள் இந்தத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். ஹரியானா வாக்காளர்கள் தேர்தலில் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13