உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு எத்தனை தொகுதியில் வெற்றி கிட்டும்?: கெஜ்ரிவால் கணிப்பு

பா.ஜ.,வுக்கு எத்தனை தொகுதியில் வெற்றி கிட்டும்?: கெஜ்ரிவால் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'பா.ஜ., 250 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றி பெறும்' என டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது: நான்கு கட்ட ஓட்டுப்பதிவிற்கு பிறகு, பா.ஜ., மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ., 250 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றி பெறும். ஹரியானா, டில்லி, பஞ்சாப், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் பா.ஜ., தோல்வி அடையும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

4 விஷயங்கள்: 'பகீர்' கிளப்பிய கெஜ்ரிவால்

இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்குமாறு, உத்தரபிரதேச மக்களை கேட்டு கொள்கிறேன். நான்கு விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு 75 வயதாகிறது. அடுத்த பிரதமர் அமித்ஷா என்று அவர் முடிவு செய்துள்ளார். அமித்ஷாவுக்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப் பட்டுள்ளனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 3 மாதங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.,வினர் மாற்ற போகிறார்கள். ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

மவுனம் ஏன்?

மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் பிரதமர் மோடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு சேகரித்தார். டில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திய போது, ஸ்வாதி மாலிவால் போலீசாரால் தாக்கப்பட்டார். அப்போது பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். ஆம் ஆத்மி கட்சி எங்கள் குடும்பம். ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடக்கவில்லை. ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

saravanan
மே 19, 2024 14:42

பாஜக-வினரை விட எதிர் கட்சிகள் தான் மோடிஜி சிந்தனையாகவே இருப்பார்கள் போலிக்கிறது தங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் தேறும் என்பதைபற்றியெல்லாம் சிந்திக்காமல், மோடிஜி மீதான காழ்புணர்ச்சி மட்டுமே புலனாகிறது பாஜக தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்கிற அச்சம் இவர்களிடம் தெளிவாகவே வெளிப்படுகிறது


s.sivarajan
மே 19, 2024 07:48

மெஜாரிட்டி கிடைக்காதபட்சத்தில் பல இண்டி கூட்டணி கட்சிகள் உடைய வாய்ப்புள்ளது


krishnamurthy
மே 18, 2024 17:09

பைலில் உள்ளவர் உத்தமன் போல் பேசுகிறார் தன கட்சி பற்றி பேசட்டும் ஊழல் என்பதால் அது பற்றி பேச பயம் பி ஜே பி பற்றி பேசவே தகுதி இல்லாதவர்


Kuppan
மே 17, 2024 10:12

ஜூன் இரண்டாம் தேதி எண்ண விடுபட்ட கம்பிகளை போய் எண்ணுங்கள், ஓன்று, இரண்டு, மூன்று, நன்கு இப்படி


venkatapathy
மே 16, 2024 17:49

ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை ,ஒரு டூப் நிச்சயமா ஊழல் செய்திருப்பதை உறுதி செய்தாய் பொய் பேச அச்சமில்லை


jss
மே 16, 2024 17:22

4 ஆம் தேதி வரையிலும் வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆமாம் 2 தேதி உள்ளே போகணுமே. அதுக்ககான தயார் எல்லாம் முடிந்து விட்டதா? கட்டம் போட்ட சட்டையெல்லாம் எடுத்து போகாதீர்கள் ஜெயிலிலேயே கொடுப்பார்கள்


Anbuselvan
மே 16, 2024 17:18

இவரே சீட்டுகள் பிஜேபி க்கு தேறும் என சொன்னால் நிச்சயமாக அதை விட % கூடுதலாகத்தான் கிடைக்கும் அதாவது சீட்டுகள் இது எப்படி இருக்கு?


kulandai kannan
மே 16, 2024 16:41

வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்


என்றும் இந்தியன்
மே 16, 2024 16:15

இந்த பொய்க்கு என்ன விலை என் இதயம் சொன்ன விலை????அப்படித்தானே


என்றும் இந்தியன்
மே 16, 2024 16:08

இல்லவே இல்லை "வெறும் தொகுதியில் தான் வெற்றி கிட்டும்" - ஸ்டாலின் நாளைய செய்தி இப்படி இருக்கும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை