மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
4 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
4 minutes ago
குட்கா விற்றவர் கைது
9 minutes ago
லஜ்பத் நகர்:அரசு மருத்துவமனைக்குள் நோயாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், டில்லி அரசு, நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜூலை 14 அன்று டில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள ஜி.டி.பி., மருத்துவமனையின் வார்டுக்குள் நோயாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தப்படுகிறது.ஊடக செய்திகளின்படி, மருத்துவமனைகளில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மருத்துவமனை வார்டுகளுக்குள் நுழையலாம். நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து காவலர்கள் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை என்று தெரிகிறது.நோயாளிகளின் மருத்துவ சிகிச்சையைத் தவிர, அவர்களின் பாதுகாப்பும் அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்தால் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.நோயாளிகளைச் சந்திக்க மருத்துவமனைக்குள் வருபவர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் சோதனை செய்வதில்லை. டில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மெட்டல் டிடெக்டர்கள், பேக் ஸ்கேனர்கள் உள்ளிட்ட கருவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.ஊடக செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், டில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கான உடனடி தேவை உள்ளது.அதன்படி, 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர், டில்லி தலைமைச் செயலர், நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.மருத்துவமனைகளில் பாதுகாப்பு பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்கள் விரிவாகக் குறிப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 minutes ago
4 minutes ago
9 minutes ago