உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை

கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை

பாகல்குன்டே: கணவரின் தொந்தரவால், விரக்தி அடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரின், ஷெட்டிஹள்ளியில் வசிப்பவர் காந்தராஜு, 33. இவரது மனைவி லதா, 30. சமீப நாட்களாக காந்தராஜுவுக்கு, திவ்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் மீது கொண்ட ஈடுபாட்டால், மனைவியை அடித்து துன்புறுத்தினார்.கணவரின் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்ததால், விரக்தி அடைந்த லதா, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில், கணவரின் கொடுமையை பற்றி விவரித்திருந்தார்.தகவலறிந்து அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், லதாவின் உடலை மீட்டனர். காந்தராஜுவை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை