மேலும் செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார்!
2 hour(s) ago | 1
கிராமப்புறங்களில் ரோபோட்டிக் கல்வி: குஜராத்தில் தீவிரம்
4 hour(s) ago
சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூர் தொகுதி, கர்நாடகாவின் பிரபலமான லோக்சபா தொகுதிகளில் ஒன்றாகும். இம்முறை இந்த தொகுதியில், பா.ஜ., சார்பில் சுதாகரும், காங்கிரஸ் வேட்பாளராக ரக்ஷா ராமையாவும் போட்டியிடுகின்றனர்.சுதாகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, பா.ஜ., தலைவர்கள் பட்டாளமே பிரசாரத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்துக்கு வருகிறார். தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணும், சுதாகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சிக்கபல்லாபூருக்கு வருகிறார். இதை காங்கிரசார் கிண்டலாக விமர்சிக்கின்றனர்.சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறியதாவது:சிக்கபல்லாபூருக்கு நான்தான் பவன் கல்யாண். பிரசாரத்துக்கு வரும் நடிகர் பவன் கல்யாண், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையாவுக்கு எதிராக பேசமாட்டார். அரசியல் ரீதியில் அவர், சிக்கபல்லாபூருக்கு வருகிறார். நானும் கூட அவரது ரசிகர்தான்.மத்திய அரசு மூலமாக, பவன் கல்யாணுக்கு நெருக்கடி கொடுத்து, சிக்கபல்லாபூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரவழைக்கின்றனர். அவர் வந்து செல்லட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
4 hour(s) ago