UPDATED : ஜூன் 08, 2024 04:47 PM | ADDED : ஜூன் 08, 2024 02:49 PM
புதுடில்லி: 'நீட் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையான நிலையில், நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கப்படும்' என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து டில்லியில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வு புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். விசாரணைக்குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். வெளிப்படைத் தன்மையுடன் நீட் தேர்வு நடை பெற்றது. 720 மதிப்பெண்ணுக்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் கருணை மதிப்பெண்ணால் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3fspkapl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கருணை மதிப்பெண்
கருணை மதிப்பெண் வழங்கியதால், மாணவர்களுக்கு 718 மற்றும் 719 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டன. தேர்வு துவங்கிய பின்பு தான் வினாத்தாள் கசிந்தன. தேர்வு முகமை தரப்பில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பே இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி 1600 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதினர். நடவடிக்கை
2018ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் படியே, தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நேரம் குறைவாக இந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படும். அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மஹா., அரசு வலியுறுத்தல்
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என மஹாராஷ்டிரா அரசு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறுகையில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது. நீட் தேர்வு மாணவர்களை வஞ்சிப்பதாகவும், மஹாராஷ்டிரா மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது என்றார்.