உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில், அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் படி, தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவற்றில் அதிகாரிகளை நியமிப்பதற்கு கவர்னரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேற்று(ஜூலை 12) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
ஜூலை 13, 2024 19:51

கவர்னர் அரசியல் சாசன மாநில முதல் குடிமகன். அனைத்து தலைமை பதவி அதிகாரிகள் நியமிக்க கவர்னர் ஒப்புதல் தேவை. பதவி உயர்வு, இடம் மாறுதல், தாற்காலிக நீக்கம்.. போன்றவற்றை கவர்னர் ஒப்புதல் இன்றி செயல் படுத்த முடியாது. இது தான் உண்மையான நடைமுறை. ஊழல் அரசியல் கட்சிகள், போலி வழக்கறிஞர்கள் தவறான செய்தியை மக்களிடம் பரப்பி, குழப்பி விட்டனர். இந்த உத்தரவு நாடுமுழுவதும் உடன் துணிந்து விரிவு படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ