| ADDED : மே 03, 2024 06:50 AM
விஜயபுரா: ''பா.ஜ.,வில் இருந்து எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வெளியேற்றப்படலாம்,'' என்று, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாட்டீல், விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவின் வடமாவட்டங்களில் பா.ஜ.,வை கட்டி எழுப்ப உழைத்த தலைவர்களில், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும் ஒருவர். ஆனால் அவருக்கு கட்சியில், உரிய மரியாதை கிடைப்பது இல்லை. எடியூரப்பா ராஜினாமா செய்த பின்பு, முதல்வர் பதவிக்கு பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத் பெயர்கள் முன்னிலையில் இருந்தன.ஆனால், இருவருக்கும் முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவியும் தராமல் இருவரையும் ஏமாற்றினர். விஜயபுரா அரசியலில் எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி செல்வாக்கு செலுத்த நினைக்கிறார். இதனால் எத்னாலுக்கு பதவி கிடைக்க விடாமல், கூட்டு சதி செய்கிறார்.கட்சிக்காக உழைத்த ஈஸ்வரப்பாபை நீக்கி உள்ளனர். எதிர்காலத்தில் எத்னாலும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படலாம். எம்.பி., ரமேஷ் ஜிகஜினகிக்கு, பஞ்சமசாலி சமூகம் மீது எந்த அக்கறையும் இல்லை. அவரை எதற்காக நாங்கள் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.