உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற தொழிலாளி கைது

பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற தொழிலாளி கைது

மங்களூரு: பலாத்கார முயற்சியில் 13 வயது சிறுமியை, துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற, தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.மங்களூரு அருகே ஜோக்கடே பகுதியில் வசிப்பவர் ஹனுமந்தா. இவரது உறவுக்கார தம்பதி பெலகாவியில் வசிக்கின்றனர். இந்த தம்பதியின் மகள் 13 வயது சிறுமி. இவருக்கு அடிக்கடி இடது கையில் வலி ஏற்பட்டது. கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக, ஹனுமந்தா வீட்டிற்கு சிறுமியை, பெற்றோர் அனுப்பி வைத்தனர்.கடந்த 6ம் தேதி ஹனுமந்தாவும், அவரது மனைவியும் வெளியே சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஹனுமந்தா, அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, படுக்கை அறையில் சிறுமி இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் துண்டு சுற்றப்பட்டு இருந்தது. சிறுமியை, கழுத்தை இறுக்கி மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது. பனம்பூர் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் ஹனுமந்தா வீட்டின் அருகே வசிக்கும் பக்கீரப்பா ஹனுமப்பா மாதர், 51 என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.இதில், 'சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றேன். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்' என்று, ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை, பக்கீரப்பா பலாத்காரம் செய்து கொன்று இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

தொழிலாளிக்கு '20 ஆண்டு'

மங்களூரு அருகே பொருகுடே கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 32. பாக்கு தோட்ட தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 65 வயது மூதாட்டி வசிக்கிறார். இந்த மூதாட்டியை பார்க்க அவரது 14 வயது பேத்தி, 2023 ஜனவரி 17ம் தேதி வந்து இருந்தார். மூதாட்டி கடைக்கு சென்றிருந்த போது, அவரது வீட்டிற்குள் புகுந்த பிரகாஷ், சிறுமியை சமையல் அறைக்கு இழுத்து சென்று, பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார்.சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவேன் என்று சிறுமியை, பிரகாஷ் மிரட்டினார். பின், சிறுமியை பலாத்காரம் செய்தார். வெளியே கூறினால் உன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவேன் என்று, மிரட்டிவிட்டு தப்பினார்.மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றினர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மங்களூரு, 'போக்சோ' விரைவு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மனு நேற்று தீர்ப்பு கூறினார். பிரகாஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை