உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா Vs மருமகன் ... கோல்கட்டா சம்பவத்தால் திரிணமுல் கட்சிக்குள் வெடித்தது மோதல்!

மம்தா Vs மருமகன் ... கோல்கட்டா சம்பவத்தால் திரிணமுல் கட்சிக்குள் வெடித்தது மோதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மருமகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கடந்த 9ம் தேதி கோல்கட்டாவின் ஆர்.ஜி.கார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தலையிட்டு, அம்மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக இருந்த சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மோதல்

இந்த நிலையில், டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மருமகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த பேரணியை அபிஷேக் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. ஆர்.ஜி. கார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினரை உடனடியாக பணிநீக்கம் செய்யாதது திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். மம்தா பானர்ஜி தனது இமேஜை பாதுகாத்துக் கொள்ள, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

அதிருப்தி

அதேவேளையில், கட்சியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சாந்தனு சென்னை கட்சியில் இருந்து மம்தா பானர்ஜி அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும், டாக்டர் கொலை விவகாரத்தை அபிஷேக் பானர்ஜி சரியாக கையாளவில்லை என்றும் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. டாக்டர் கொலையால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அவரது மருமகனும் மோதலில் ஈடுபட்டிருப்பது திரிணமுல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாக்

மேற்கு வங்க மாநிலமே போராட்டங்களால், என்ன செய்வதென்று மம்தா பானர்ஜி புலம்பி வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த மாதம் அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல இருப்பது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

S. Neelakanta Pillai
ஆக 23, 2024 06:26

ஒரு அரசுத் துறை நிர்வாகத்தின் நேர்மையான செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் அரசியல் கட்சியின் நிர்வாகமும் இடையூறு ஏற்படுத்துகிறது என்பது அப்பட்டமாக பத்திரிகைகள் வெளிக்கொண்டு வந்த உண்மை. இது ஏதோ இந்திய ஜனநாயகம் அரசியல் அமைப்பு என்பது ஒரு தனிப்பட்ட ஒரு சிலரின் குடும்ப விவகாரம் என்பது போல் மாமியார் அடித்தது சரியா, மருமகள் உடைத்தது சரியா என்கின்ற வகையில் பத்திரிகை விவாதம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. கேலிக்கூத்தாகி போனது மாநில சுயாட்சி.


TSRSethu
ஆக 22, 2024 22:07

நாடகம்.


M Ramachandran
ஆக 22, 2024 21:34

காங்கரஸ் ஓரூ தேச விரோத கட்சியாகா மாறி கொண்டிருக்கு. சீ சித்த ராமையா விவரம் நமக்கு இப்பொது தான் தெரிய வருகிறது. ராகுலின் ராகுலுக்கு ஆணை யிட்ட அமெரிக்காக மூஞ்சி தே... மகன் ஆணை படி தேசிய வங்கிகள் ஷேர்/பங்கு மார்க்கெட் மற்றும் இந்திய தொழில் முதலாளி ஆதானீ இவர்களின் பொருளா தரத்தை சீர் குலைக்க செய்த சதி. மக்கள் மிக கவனமாக இருக்க வேலாண்டிய தருணம். நம் வாழ்க்கிய்ய தரம் கீழ் போவதற்கு செய்யும் சதி. இவ்வளவு அழுக்கு உள்ள கொண்டவர்களா இந்த மோசமான அயோக்கியர்களா நம் அரசியல் வாதிகள். சொந்த நலனுக்கு நாட்டைய்ய காட்டி கொடுக்கும் கயவர்கள்


Ramesh Sargam
ஆக 22, 2024 20:34

இது சத்தியமா மோதல் இல்லை என்று நன்றாக எனக்கு தெரிகிறது. விஷயத்தை திசை திருப்ப மம்தா Vs மருமகன் மோதுவதுபோல நாடகம். அவ்வளவுதான்.


Easwar Kamal
ஆக 22, 2024 17:50

இவ்ளளவு நடந்தும் ஒரு மருத்தவமனைக்கு அதை சார்ந்தவர்களுக்கும் குடை பிடிக்கிறார்கள் என்றால் இதை போன்று ஏற்கனவே பல பெண்களுக்கு நடந்து இருக்கலாம். கொலை செய்ய பட்ட பெண் இனங்காமல் போனதால் கொலை செய்யபட்டு இருக்கலாம். மம்தா கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமா கூட சம்பந்தம் இருக்கலாம். இது எல்லாம் ஒரு பால பாடம். இனியாவது எந்த அரசியல் காட்சிகள் இதை போன்ற சம்பந்த பட்டு இருந்தால் ஒதிங்கி போய் விடுங்கள். கண்டிப்பாக மம்தா இந்த கொடுர செயலுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.


nagendhiran
ஆக 22, 2024 14:09

இது நடிப்பு


Sridhar
ஆக 22, 2024 13:44

இதுவும் ஒரு திசைதிருப்பும் வேலையாகவே இருக்கும். அந்த பையனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு ஒன்றும் இல்லை, எல்லாம் இந்த அம்மா கொடுத்த செல்லத்தினால் தான் கட்சியில இருக்கிறான். இதுலவேற அவன் மீதும் அவன் மனைவி மீதும் ED CBI கேசுகளும் எக்கச்சக்கமாக இருக்குது. இந்த லட்சணத்துல வெளிநாட்டுல சிகிச்சைங்கற பேருல தப்பியோட முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மோதல் என்னத்த


Barakat Ali
ஆக 22, 2024 13:39

இது உண்மையான உட்கட்சி மோதல் அல்ல ...... குடும்பத்தை விட்டு கட்சி வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதால் சும்மானான்ச்சுக்கும் ஒரு நாடகம் ...... தமிழக குடும்பக் கட்சியில் மதுரைக்கும் - அதாங்க அஞ்சா நெஞ்சர், சென்னைக்கும் நடந்த பூசலை - அதாங்க இன்றைய துக்ளக்கார் நினைவில் கொள்க .....


Sivagiri
ஆக 22, 2024 13:05

அத்தையும் மருமகனும் சேர்ந்து ட்ரீட்மென்டுக்கு , போக வேண்டியதுதான் . . . இங்க இருக்க நிலைமை மோசமாகி கொண்டுதான் இருக்கும் . . . அப்டியே போயி ஒரு ஆறு மாசம் வெளிநாட்ல ஊரை சுத்தீட்டு வர வேண்டியதுதான் . . . நம்ம ப.சி-கிட்ட , கா.சி.-கிட்ட , சொன்னா நல்ல இடமா சொல்லுவாங்க . .


Ramanujadasan
ஆக 22, 2024 13:00

மேற்கு வங்க கற்பழிப்பு மற்றும் படு கொலையை கண்டித்து ஏதேனும் ஒரு இந்தி கூட்டணி கட்சியோ அல்லது தமிழக அடிமை கூத்தாடிகளோ இல்லை கொள்ளை திமுக கட்சியோ பேசினார்களா ? இல்லவே இல்லை . பப்பு ஒரு பேச்சுக்கு ஏதோ உளறி விட்டு , திரிணாமுல் எதிர்பால் அதை விட்டு விட்டு ஓடியே விட்டார் . கேவலம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை