உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வயது மகள் கொலை கொடூர தாய் கைது

3 வயது மகள் கொலை கொடூர தாய் கைது

சுப்ரமண்யபுரா: தன் 3 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.பெங்களூரின், மஞ்சுநாதநகரில் வசிப்பவர் ரம்யா, 31. இவரது கணவர் வெளிநாட்டின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எப்போதாவது பெங்களூருக்கு வந்து செல்வார். ரம்யா தன் மகள் ப்ரீத்திகா, 3, உடன் வசிக்கிறார்.இவர் பெங்களூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். சமீபத்தில் பணியை விட்டுவிட்டார். மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரம்யா வெறுப்படைந்தார். மகள் வளர, வளர பிரச்னைகளும் அதிகமாகும் என, கருதினார்.நேற்று மதியம் 12:30 மணியளவில், துப்பட்டா பயன்படுத்தி, மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர், சிறுமி இறந்ததாக தெரிவித்தார். சிறுமி கழுத்தில் காயம் அடையாளம் இருப்பதை கண்ட டாக்டர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அங்கு வந்து, ரம்யாவை கைது செய்தனர். மகளுக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கொலை செய்ததை ஒப்பு கொண்டார். சுப்ரமண்யபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ