உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாய், கால்களை கட்டி, மூட்டையில் திணித்து… மனசாட்சியை உலுக்கும் ம.பி., கொடூரம்

வாய், கால்களை கட்டி, மூட்டையில் திணித்து… மனசாட்சியை உலுக்கும் ம.பி., கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்; மத்திய பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் கால்களை கட்டி, சாக்குப் பையில் மூட்டை கட்டி, ஆற்றில் வீச முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு சந்தேகம்

தலைநகர் போபாலின் கிழக்குப் பகுதியில் இருந்து 500 கி.மீ., தொலைவில் உள்ள சத்னா பகுதியில் இ-ரிக்சாவில் மூட்டைகளை எடுத்துச் சென்ற நபர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு திடீர் சந்தேகம் எழுந்தது. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சாக்குப்பையில் நாய்கள்

அப்போது, 10க்கும் மேற்பட்ட நாய்களின் கால்கள் மற்றும் வாயை கயிறு மூலம் கட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நாய்களை மூட்டையில் கட்டி ஆற்றில் வீசச் செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள், நாய்களை விடுவித்ததுடன், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

வழக்குப்பதிவு

ஆனால், போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், நாய்களை சாக்குப் பையில் எடுத்து வந்த நபர்கள் கோத்வலி பகுதியைச் நந்து பசோர், பிரதீப் பசோர் என்பது தெரிய வந்தது. என்ன காரணத்தால் இப்படி செய்தனர், நாய்க்கறி போட திட்டமிட்டு, மாட்டிக்கொண்டதும், ஆற்றில் வீசப்போகிறோம் என்று கூறினார்களா என விசாரணை முழு வீச்சில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஆக 03, 2024 23:06

இதுதாண்டா ம.பி மாடல். ம.பி.ஓட்டல்களில் தப்பித் தவறி நான் வெஜ் சாப்புட்டுறாதீங்க.


ram
ஆக 09, 2024 18:28

ஆமாம் போன வாரம் பெங்களுருவில் 200 கிலோ நாய் கறி கொண்டு வந்த அமைதி ஆளு, காங்கிரஸ் நாட்டுக்கு வீட்டுக்கு கேடு.


Rajamani K
ஆக 03, 2024 21:33

எவன் எவன் தெரு நாய்களைக் கொல்லக் கூடாது என்கிறானோ அவன் பசுக்களுக்கு கோ சாலை மாதிரி, நாய்களுக்கு நாய் சாலை நடத்தச் சொல்ல வேண்டும்.


ram
ஆக 09, 2024 18:29

உனக்கு வேண்டும் என்றால் எதை வேணாலும் தின்னு யாரு தடுத்தா


Barakat Ali
ஆக 03, 2024 20:52

ராபீஸ் பரவினால் அதன் கொடுமை தெரியும் ..... கொத்துக்கொத்தாக மரணம் நிகழும் ..........


S. Narayanan
ஆக 03, 2024 19:32

இனி குதிரை கறி கழுதை கறி பூனை கறி என்று எல்லாம் கிடைக்கும்


Kasimani Baskaran
ஆக 03, 2024 19:20

தெரு நாய்களை குக செய்வதே பிரச்சினைக்கு தீர்வு. நாய் வளர்ப்போர் பொறுப்புடன் நடந்து கொள்வதும் அவசியம்.


தமிழ்வேள்
ஆக 03, 2024 22:59

கு.க செய்து விட்டால் மட்டும் நாய் கடிக்காமல் இருக்குமா? கடித்தால் ரேபீஸ் வரும்...எனவே அழித்து விடுவது நல்லது..


ஆரூர் ரங்
ஆக 03, 2024 19:15

நோய்களைப் பரப்பும் ஈ கொசு ,பயிர்களை அழிக்கும் பூச்சிகளை அரசே கொல்கிறது. .ஆனால் அப்பாவி குழந்தைகள், மனிதர்களைக் கடித்துக் குதறும் தெரு நாய்களிடம் அன்பு காட்டணுமாம். இதில் எது நியாயம்?


Indian
ஆக 03, 2024 18:46

இப்படியே இரக்க பட்டு , தெரு நாய்கள் அளவுக்கு அதிகமாக பெருகி , மனிதனை கொல்ல ஆரம்பித்து விட்டது ...தெரு நாய்கள் தொல்லை ரொம்ப அதிகம் .


CHARUMATHI
ஆக 03, 2024 21:07

Unmai


என்றும் இந்தியன்
ஆக 03, 2024 18:42

எப்படி தெருநாய்களை கொல்வது என்று தெரியாத காரணத்தால் இப்படி நடந்திருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை