மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
புதுடில்லி, மொபைல் போன்களில் வரும் அவசியமற்ற வர்த்தக அழைப்புகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு மற்றும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு வழிமுறைகளை எடுத்து வருகிறது. தேவையற்ற அழைப்புகளை தெரிந்து கொள்ள உதவும் காலர் ஐ.டி.,யான, சி.என்.ஏ.பி., எனப்படும் அழைப்பவரின் பெயரை காண்பிக்கும் வசதி அனைத்து மொபைல் போன்களிலும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொலை தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டது.ஆனால், தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக கூறிய தொலை தொடர்பு நிறுவனங்கள், அந்த சேவையை வழங்காமல் காலம் தாழ்த்தின.இந்நிலையில், மத்திய அரசு மற்றும் டிராயின் அழுத்தம் காரணமாக, தேவையற்ற அழைப்புகளை தெரிந்து கொள்ளும் காலர் ஐ.டி., சேவையை சோதனை முறையில் மேற்கொள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து, பிரபல தொலை தொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் ஹரியானாவில் சோதனை முறையில், காலர் ஐ.டி., சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அது பிற மாநிலங்களிலும் பயன்பாட்டுக்கு வரும். இதில், மொபைல் எண் மட்டுமின்றி அழைப்பவரின் விபரங்களும் காட்டப்படும். சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும். அதன் பின்னரே, அதன் பயன்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago