உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று ஒடிசா அமைச்சரவை கூட்டம்:

இன்று ஒடிசா அமைச்சரவை கூட்டம்:

புவனேஸ்வரம்; ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக பா.ஜ. ஆட்சி நேற்று பொறுப்பேற்ற நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் புரி ஜெகந்நாதர் கோயில் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒடிசாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில், பா.ஜ., 78 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து ஒடிசா முதல்வராக பா.ஜ.வின் மோகன் சரண் மஜி நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஒடிசா அமைச்சரை கூட்டம் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் தலைமை செயலகத்தில் நடக்கிறது.இதில் புரி ஜெந்நாதர் கோயில் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி கோயிலிலுக்குள் நுழையும் வழிப்பாதைகள் தொடர்பாக பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது.முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை