மேலும் செய்திகள்
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவோம்; ஜெய்சங்கர் உறுதி
49 minutes ago | 1
ஆனேக்கல்: ஆனேக்கல் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து, நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ரூரல் ஜிகனியில் வசித்தவர் முனி எல்லப்பா, 46; கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார். ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி சிகிச்சைக்கு சென்று வந்தார்.கடந்த 16ம் தேதி முனி எல்லப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முறையாக சிகிச்சை அளிக்காமல், டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.நேற்று காலை அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மதியம் மருத்துவமனையின் இரண்டாவது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
49 minutes ago | 1