உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார்: சிக்கோடியில் அமித் ஷா திட்டவட்டம்

ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார்: சிக்கோடியில் அமித் ஷா திட்டவட்டம்

சிக்கோடி : ''உத்தரபிரதேசம் ரேபரேலியில் பா.ஜ., வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைவார். மகனை வெற்றி பெற செய்ய நினைக்கும் சோனியாவின் கனவு பலிக்காது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.கர்நாடகாவில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. 14 தொகுதிகளிலும் காங்கிரஸ், பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுமே பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5dmz1ij7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகாவின் சிக்கோடி லோக்சபா தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

எஸ்.டி.பி.ஐ., அமைப்பு

சிக்கோடியின் ஹுக்கேரியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே'வில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், எஸ்.டி.பி.ஐ.,க்கு தொடர்பு இருப்பது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்துள்ளது. இத்தகைய எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் ஆதரவோடு காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தார். இனி கர்நாடக மக்கள் அச்சப்பட தேவையில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள், மோடி மீண்டும் பிரதமராகி கர்நாடகாவை காப்பாற்றுவார்.ஹூப்பள்ளியில் நேஹா என்ற கல்லுாரி மாணவி, மதம் மாற்றத்துக்கு ஒப்புக் கொள்ளாததால், கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் எனில், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.

ராகுல் ஒரு பொய்யர்

அப்போது, அநீதி செய்தவர்களை தலைகீழாக நிற்க வைத்து, தக்க பாடம் புகட்டப்படும். காங்கிரசார் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தடுத்து நிறுத்தினர்.ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில், கர்நாடகாவை சுரண்டிவிட்டனர். ஓட்டு போடா விட்டால், மின் தடை செய்வோம் என்று மிரட்டுகின்றனர். ராகுல் அண்ட் கம்பெனி இந்த நாட்டை பாதுகாப்பாக வைக்க மாட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மோடி தேவை.ராகுல் ஒரு பெரிய பொய்யர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் தான் பா.ஜ., வெற்றி பெறுவதாக குற்றம் சாட்டினார். அப்படி என்றால் தெலுங்கானா, தமிழகம், ஹிமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., ஏன் தோற்றது?

சோனியா கனவு

ராகுலை, பா.ஜ.,விற்கு எதிராக 20 முறை சோனியா கொண்டு வந்தார். ஆனால், அனைத்திலும் ராகுல் தோல்வியை சந்தித்தார். தற்போது அமேதியில் இருந்து ரேபரேலிக்கு ஓடி உள்ளார்.இங்கிருந்தே, அந்த தொகுதியின் முடிவை நான் கூறுகிறேன். அங்கு பா.ஜ., வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைவார். மகனை வெற்றி பெற செய்ய நினைக்கும் சோனியாவின் கனவு பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை