உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல், வெங்கடேஷ் பிரசாத் தார்வாட் தொகுதியில் போட்டி

ராகுல், வெங்கடேஷ் பிரசாத் தார்வாட் தொகுதியில் போட்டி

தார்வாட்: தார்வாட் லோக்சபா தொகுதியில், ராகுல் காந்தி, வெங்கடேஷ் பிரசாத் போட்டியிடுகின்றனர்.லோக்சபா தேர்தலில் பல வினோதங்கள் நடக்கின்றன. குறிப்பாக ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தலைவலியாக உள்ளனர்.தார்வாட் தொகுதியில் ராகுல் காந்தி, வெங்கடேஷ் பிரசாத் போட்டியிடுகின்றனர். இவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுலோ அல்லது கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தோ அல்ல. இவர்கள் வேறு.பெங்களூரின் ராஜாஜிநகரில் வசிக்கும் ராகுல் காந்தி, 51, பி.யு.சி., வரை படித்துள்ளார். சொந்த தொழில் செய்கிறார். தார்வாட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தன்னிடம் 35.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக, வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.மைசூரில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றுபவர் வெங்கடேஷ் பிரசாத், 45. இவர், 'இண்டியன் லேபர் கட்சி' வேட்பாளராக களமிறங்கி உள்ளார். தனக்கு எந்த சொத்துகளும் இல்லை என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை