உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியில் இருந்து ராமர் பாலம் ‛கிளிக்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்

விண்வெளியில் இருந்து ராமர் பாலம் ‛கிளிக்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரை தான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
ஜூன் 29, 2024 10:57

அம்புட்டு ஏளித்து கடல் உள்வாங்கி விட்டால் இந்த மணல் மேடு நற்றாய் தெய்ரயும் அதில் நடக்கலாம் அக்கறை போக சும்மா உருடாதீர்கள் கேட்டு காதில் ரத்தம் தான் வருகின்றது


venugopal s
ஜூன் 24, 2024 22:18

அடுத்த சில தினங்களுக்கு சமூக வலை தளங்களில் இதை வைத்தே உருட்டுவதற்கு ஒரு கூட்டம் ஏற்கனவே தயாராகி இருக்கும்!


A P
ஜூன் 24, 2024 22:00

மனிதனாக அவதரித்த ஸ்ரீராமனுக்கு உதவி செய்த இனம் அழிந்து போன, பேசும் திறனுடைய குரங்குகளான வானர கூட்டம் ராமரின் பெயரை உச்சரித்தவாரே அமைத்த பாலம்தான் இது. இதற்க்கு ஆதாரமாக பல லக்ஷம் ஆண்டுக்கு முந்தியிலிருந்து ஒத்துக்கொள்ளப்பட்ட ராமாயணம் என்கிற இதிகாசம் சாட்சியாக உள்ளது. பல பைத்தியங்கள் , நம் பெரியோர்களும், நமது சரித்திரங்களை வரலாறுகளும் சொல்வதை வேண்டுமென்றே மறுத்து விட்டு, எவனோ வெளிநாட்டுக்காரன் சொல்வதை, முட்டாள்தனமாக தவறான செய்தியைப் பரப்பி விடுகின்றன. இந்தப் பாவத்தை இப்போதே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டன அந்த பைத்தியங்கள். ஜெய் ஸ்ரீராம்.


சண்முகம்
ஜூன் 24, 2024 18:52

அங்கே இயற்கையாய் அமைந்த மேட்டை படம் காட்டுகிறது. இதற்கு முன் இந்த மாதிரிப் படங்கள் நிறைய வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக ஒன்றும் இல்லை.


S. Narayanan
ஜூன் 24, 2024 18:39

நாம சொன்னா நம்ம ஆளுங்க கேட்க மாட்டாங்க. அதையே அயல்நாட்டினர் கூறினால் வாய் மூடி ஓகே என்பர். அது அப்படி தான். என்ன செய்வது. அதே சமயம் அயல் நாட்டினர் நம் மொழிக்கும் சரித்திரம் மற்றும் இதிகாசங்கள் உண்மை என்பதை முழு மனதுடன் ஏற்று கொள்கிறார்கள். அரசியல் வாதிகள் பேச்சை நம்புவது இல்லை.


J.Isaac
ஜூன் 24, 2024 18:30

மணல் மேடுகள்


rsudarsan lic
ஜூன் 24, 2024 17:48

நாம் எத்தனை செயற்கை கோள்கள் அனுப்பினால் என்ன, அமெரிக்காவோ ஐரோப்பாவோ தான் எதாவது எடுத்து சொல்ல வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை