உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.: நான்கு நாட்களில் இரண்டாவது ரயில் விபத்து

உ.பி.: நான்கு நாட்களில் இரண்டாவது ரயில் விபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., மாநிலத்தில் நான்கு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. உ.பி.,மாநிலம் கோண்டாவில் கடந்த18-ம் தேதி சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா என்னுமிடத்தில் இன்று (20.07.2024) டில்லி லக்னோ ரயில் பாதையி்ல் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இருப்பினும் உயிர்சேதம் இல்லை என கூறப்பட்டுள்ளது. சரக்கு ரயில் மொராதாபாத்தில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் அம்ரோஹாவில் தடம் புரண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே மாநிலத்தில் நான்கு நாட்களுக்குள்ளாக இரண்டு முறை ரயில் விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rengarajan
ஜூலை 21, 2024 09:27

அடிக்கடி இரயில் விபத்து ஏற்படுவது நாச வேலையாக இருக்கலாம். ஏனனெனில் கடந்த 9 ஆண்டுகளாக அதிக விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஒராண்டில் தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இயில்வே துறை சற்று விஜில் ஆக இருக்கவேண்டும்.


அப்பாவி
ஜூலை 21, 2024 09:14

நம்ம ரயில் அமிச்சர் மிகவும் திறமைசாலி... அவருக்கும் விபத்துக்கும் சம்பந்தமில்லை.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி