மேலும் செய்திகள்
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
4 hour(s) ago | 41
மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு
6 hour(s) ago | 3
பெங்களூரு : ''சக்தி, கிரஹ லட்சுமி திட்டங்களை திருநங்கையருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா, 'பாலின சிறுபான்மையினர் எனும் திருநங்கையருக்கும், சக்தி, கிரஹ லட்சுமி திட்டங்களை விஸ்தரிக்கும் நோக்கம் உள்ளதா?' என, கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசியதாவது:மாநிலத்தில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 20,216 பாலின சிறுபான்மையினர் உள்ளனர். ஆனால், 2024 லோக்சபா தேர்தலின் ஓட்டுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 43,752 பேர்.மாநில அரசு சார்பில், ஏற்கனவே ராஜிவ்காந்தி கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பாலின சிறுபான்மையினருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2012 - 13 ஆண்டு முதல், மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தலா 30,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால், இதுவரை 9,211 பயனடைந்துள்ளனர். இது போன்று, சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யவும்; கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் தலா 2,000 ரூபாய் வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய திருங்கையர் பதிவு சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
4 hour(s) ago | 41
6 hour(s) ago | 3