உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய் இறந்த துக்கத்தில் அக்கா, தம்பி தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் அக்கா, தம்பி தற்கொலை

சிக்கபல்லாபூர் : தாய் இறந்த துக்கத்தில், அக்காவும், தம்பியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.சிக்கபல்லாபூர், சித்லகட்டாவின், பிரேம் நகரில் வசிப்பர் நடராஜ், 50. இவரது மனைவி லலிதம்மா, 45. தம்பதிக்கு நவ்யா, 25, என்ற மகளும், பிரபு, 23, என்ற மகனும் இருந்தனர். நடராஜ் கூலி வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.லலிதம்மா தன் மகளையும், மகனையும் வெளியுலகே தெரியாமல் வளர்த்தார். வீட்டுக்கு வெளியில் அனுப்பாமல் வைத்திருந்தார். இவர்களுக்கு எல்லாமுமாக இருந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு, உடல் நிலை பாதிக்கப்பட்டு லலிதாம்மா உயிரிழந்தார்.திடீரென தாய் இறந்ததால், நவ்யாவும், பிரபுவும் நிலைகுலைந்தனர். மன அழுத்தத்துக்கு ஆளாகினர். அக்காவும், தம்பியும் நேற்று அதிகாலை சித்லகட்டா நகர் அருகில் உள்ள தண்டவாளத்தில், தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டனர்.பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை