மேலும் செய்திகள்
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
6 minutes ago
கைவினை திறன் பயிற்சி முகாம்
11 minutes ago
இன்று மக்கள் நீதிமன்றம்
12 minutes ago
பெங்களூரு: ''முதலில் சிவகுமாரை முதல்வராக்கட்டும். அதன்பின் ஒரு டஜன் தலைவர்களை துணை முதல்வராக்கட்டும்,'' என, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: 'கூடுதல் துணை முதல்வர்கள் பதவி உருவாக்க வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர். முதலில் சிவகுமாரை முதல்வராக்கட்டும். அதன்பின் ஒரு டஜன் தலைவர்களை துணை முதல்வராக்கட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவரை, முதல்வராக்குவது காங்கிரசின் சம்பிரதாயம். எனவே சிவகுமாரை முதல்வராக்கட்டும். அதன்பின் எத்தனை துணை முதல்வர் பதவியை வேண்டுமானாலும் உருவாக்கட்டும்.லோக்சபா தேர்தலில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்காத அமைச்சர்களை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
6 minutes ago
11 minutes ago
12 minutes ago