உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கையில் கைதிகளுக்கான முத்திரை: ஹேமந்த் சோரன் பரபரப்பு தகவல்

கையில் கைதிகளுக்கான முத்திரை: ஹேமந்த் சோரன் பரபரப்பு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சிறை அதிகாரிகளால், தன் கையில், 'கைதி' என முத்திரை குத்தப்பட்டதை, தன் பிறந்த நாளன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், நேற்று தன், 49வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.நில அபகரிப்பு மோசடியில் நடந்த பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்ததை அடுத்து, 150 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின், ஜூன் 28ல், ராஞ்சியில் உள்ள சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார். இதன்பின், ஜார்க்கண்ட் முதல்வராக அவர் மீண்டும் பதவியேற்றார்.இந்நிலையில், ராஞ்சி சிறையில் இருந்து வெளியே வந்தபோது, தன் கையில், சிறை அதிகாரிகளால் கைதி முத்திரை குத்தப்பட்டதை, முதல்வர் ஹேமந்த் சோரன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு:என் பிறந்த நாளான இன்று, கடந்த ஓராண்டு நினைவுகள் என் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டன. அதுதான் இந்த கைதியின் முத்திரை. நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சிறை அதிகாரிகள் என் கையில் இந்த முத்திரையை குத்தினர். இந்த முத்திரை, என்னுடையது மட்டுமல்ல; நம் ஜனநாயகத்தின் தற்போதைய சவால்களின் சின்னம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், 150 நாட்கள் சிறையில் அடைக்க முடியும் என்றால், சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களை நான் சொல்லத் தேவையில்லை. அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன். ஆனால் இந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

bgm
ஆக 11, 2024 15:33

நெற்றியில் போடவேண்டும்


Kannan
ஆக 11, 2024 11:25

All the thieves should be tattooed so that new political thieves will be warned


theruvasagan
ஆக 11, 2024 11:08

மோசடி வழக்குல ஜெயிலுக்குப் போனா தியாகி என்றா முத்திரை குத்துவாங்க.


சகுரா
ஆக 11, 2024 06:59

சாதாரண மக்களுக்கும் முதலமைச்சருக்கும் சட்டம் ஒன்றுதான் என்பது நல்லதுதானே?


அஜய் சென்னை இந்தியன்
ஆக 11, 2024 01:13

சிறையில் அடைக்க படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை என்று சொன்னால்.....இதை யார் நம்புவார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் சிறைக்கு போய் விட்டு வந்ததும் அல்லது சிறைக்குள் இருந்து கொண்டு முதலமைச்சர் பதவில் இருப்பது, அல்லது சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் முதலமைச்சர் பதவி, மீண்டும் துணை முதலமைச்சர் பதவி, மீண்டும் மத்திய அமைச்சர் பதவி, மீண்டும் MLA பதவி... ஆகா ஆகா இது அல்லவா சொர்க்கம் ..இவர்கள் வாழ்க்கைதான் தான் பூலோகத்தில் இவர்கள் சொர்க்கத்தை பார்க்கிறார்கள். 500 கோடி உழல், 1000 கோடி உழல், 5000 கோடி, 10000 கோடி, 1 இலட்சம் கோடி மேலே உழல் வழக்கு நடந்தது.... ஆனால் யாரும் தண்டனை பெற்று அரசியல் வாழ்க்கையை விட்டு போன மாதிரி இல்லை. தான் சிறைக்கு சென்றால் மகன், மனைவி ஆட்சி செய்வார்கள். வெளியே வந்ததும் மீண்டும் முதலமைச்சர். அட டா இது அல்லவா வாழ்க்கை. கொடுத்து வசவனுங்க. நாமளும் தான் இருக்கும் 8 hours duty, அதில் 2hours அரசியல் வாதிகளை குறை சொல்லுவது. நாய் பொழப்பு. என்ன உழல் செய்தாலும் வழக்கு முடிய 10years to 15year ஆகும். கீழ் கோர்ட்டில் 5வருடம், high கோர்ட் வில் 5வருடம், சுப்ரீம் கோர்ட்டில் 5 வருடம்....ஆனால் தீர்ப்பு வந்தாலும் 4years or 5years சிறைதான். அதில் வழக்கு விசாரணையில் கொஞ்சனால.சிறையில் இருந்ததை கழித்தும் விடுவார்கள். உண்மையில் வாழ்ந்தால் அரசியல் வாதி வாழ வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை