உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்கொலை நபரின் பின்னணி அம்பலம்

தற்கொலை நபரின் பின்னணி அம்பலம்

தொட்டகல்லசந்திரா: கடன் தொல்லை, மன உளைச்சலால் 57 வயது நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.பெங்களூரு தொட்டகல்லசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை 5:45 மணிக்கு, மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து 57 வயது நபர், தற்கொலை செய்து கொண்டார். கோனணகுண்டே போலீசார் விசாரித்தனர்.அவர், உத்தர பிரதேச மாநிலத்தின் நவீன்குமார் அரோரா, 57, என்பதும், பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்ததும் தெரிந்தது. 10 ஆண்டுகளுக்கு முன், கே.ஆர்., மார்க்கெட்டில் நவீன்குமார், 'ஹார்டுவேர்ஸ்' கடை நடத்தினார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடினார். பின் மனைவி, மகன், மகளிடம் அடிக்கடி சண்டை போட்டார்.வீட்டை விட்டு வெளியேறி, ஜெ.பி.நகர், கே.ஆர்.,மார்க்கெட் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கினார். இரண்டு ஆண்டுகளாக குமாரசாமி லே - அவுட் பிலேகஹள்ளியில் தனியாக வசித்தார். உறவினர்களிடம் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தினார்.ஆனால், கடனை திருப்பி கொடுக்கவில்லை. கடன் கொடுத்த உறவினர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்தவர், மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை