வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பலே பலே நடத்துனர் வண்டி ஓட்டி காப்பாற்றிவிட்டார். நல்ல சினிமா கதை.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
உடுப்பி: ஓட்டுனர் ஒருவர், காதலியுடன் சண்டை போட்டு, பஸ்சை பாதியில் நிறுத்தி விட்டு சென்றதால், பயணியர் அவதிப்பட்டனர்.உடுப்பி நகரில் இருந்து சந்தேகட்டேவுக்கு நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று, பயணியருடன் சென்று கொண்டிருந்தது. நிட்டூர் அருகில் செல்லும் போது, ஒட்டுனரின் காதலி பஸ்சில் ஏறினார். அப்போது ஏதோ காரணத்தால், ஓட்டுனருக்கும், காதலிக்கும் சண்டை ஏற்பட்டது.இருவரையும், நடத்துனர் சமாதானம் செய்ய முயற்சித்தும், முடியவில்லை. இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காதலியுடன் வாக்குவாதம் செய்தபடியே, பஸ்சை ஓட்டினார். காதலியின் தொல்லையால் கடுப்படைந்த ஓட்டுனர், சந்தேகட்டேவின், ஆசீர்வாத் திரையரங்கு அருகில், பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டார்.அவர் சென்ற சிறிது நேரத்துக்கு பின், காதலியும் இறங்கி சென்று விட்டார். பாதியில் பஸ் நின்றதால், பயணியர் பரிதவித்தனர். இதை பார்த்த நடத்துனர், பஸ்சை ஓட்டி வந்து பஸ் நிலையத்தில் நிறுத்தினார். ஓட்டுனரின் செயலை பயணியர் கண்டித்தனர்.
பலே பலே நடத்துனர் வண்டி ஓட்டி காப்பாற்றிவிட்டார். நல்ல சினிமா கதை.
1 hour(s) ago