மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
சிக்கபல்லாப்பூர்: விவாகரத்து செய்யாமல் திருமணம் முடித்ததாக கூறி, கணவரின் இரண்டாவது திருமணத்தில், முதல் மனைவி ரகளை செய்தார்.பெங்களூரு சிக்கபானவாராவைச் சேர்ந்தவர் நோகன் காந்த்.இவரது முதல் மனைவி ரஷ்மி. 2018ல் சிக்கபல்லாப்பூர் டவுனில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் மகளும் உள்ளார். கருத்து வேறுபாட்டால் 2022ல் இருவரும் பிரிந்தனர். விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.முதல் திருமணம் நடந்த, அதே சர்ச்சில் குளோரி என்ற பெண்ணை, நோகன் காந்த் நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ரஷ்மி, சர்ச்சிற்கு சென்றார்.'எனக்கு விவாகரத்து கொடுக்காமல் எப்படி, இரண்டாவது திருமணம் செய்து கொள்வாய்' என்று கேட்டு, நோகனிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டார். இதனால் கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்ச் சிறிது நேரத்திலேயே களேபரமாக மாறியது.அங்கு வந்த போலீசார், ரஷ்மியை சமாதானம் செய்தனர். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் தான், இரண்டாவது திருமணம் செய்ததாக நோகன் காந்த் கூறினார்.
1 hour(s) ago