உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாக்ஸின் போட்டவர்களுக்கும் கொஞ்சம் பாதிப்பு

கோவாக்ஸின் போட்டவர்களுக்கும் கொஞ்சம் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோவிட் தடுப்பு ஊசியான கோவாக்ஸின் போட்டவர்களுக்கும் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனராஸ் ஹிந்து பல்கலை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 2022 ஜனவரி முதல் 2023 ஆகஸ்ட் வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் பலருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. நரம்பியலில் பாதிப்பு, தோல் நோய், மூட்டு இணைப்பு, சதைப்பிடிப்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால மாற்றம் , குறைந்த அளவில் பக்கவாதம், பொதுவான சில பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவாக்ஸின் எடுத்து கொண்ட 30 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கோவிஷீல்டு போட்டவர்களுக்கு பாதிப்பு இருப்பது அந்நிறுவனமே ஒப்பு கொண்டதன் பேரில் இந்த மருந்து திரும்ப பெறப்பட்டது. தற்போது கோவாக்ஸின் பாதிப்பும் வெளியாகி இருக்கிறது.கோவாக்ஸின் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lion Drsekar
மே 17, 2024 17:06

இந்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் , வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக இழப்பீடு அந்த கம்பெனி கொடுக்கவேண்டி வரும், பாரம்பரிய மருத்துவர்கள் பல இடங்களில் இலவசமாக மற்றும் குறைந்த விலைக்கு சித்த மருந்து கொடுத்து முழுவதுமாக சரிசெய்துவந்த நிலையில் , சட்டத்தின் துணையுடன் , எல்லோரையும் கண்டிப்பாக போடவைத்தது ? பாரம்பரிய மருந்தால் யாருமே இறக்கவில்லை அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை அப்படி இருக்க பலர் தங்கள் குடும்பத்தார்களை இழந்துள்ளார்கள் , பாதிக்கப்பட்டு உள்ளார்கள் போபால் விஷ வாயு போல் தான் இந்த மருந்தும் ஆகவே இதற்க்கு கண்டிப்பாக இழப்பீடு கொடுக்கவேண்டி வரும் கிராமங்களில் சொல்வார்கள் ஒருவன் ஆமையை அதன் ஓட்டின் மீது தடியால் அடித்துக்கொண்டு இருக்க வழிப்போக்கன் ஒருவன் நீ என்ன செய்கிறாய் கேட்க அவன் ஆமையை அடித்துக்கொல்கிறேன் என்று கூற , வழிப்போக்கன் அப்படி அடித்தால் சாகாது, திருப்பிப்போட்டு அதன் அடிவயிற்றுப்பகுதியில் அடித்தால் அது இறந்து போகும் என்று கூறிவிட்டு , செல்லும்போது நமக்கேன் அந்த பாவம் அந்த ஆமை பிழைத்து போகட்டும் என்று சொல்லிக்கொண்டே சென்ற கதை போல் இந்த கருது நமக்கேன் வம்பு மருந்து கம்பெனி பிழைத்து போகட்டும், வந்தே மாதரம்


J.Isaac
மே 17, 2024 14:54

ஆயுர்வேதத்திலும் பக்கவிளைவுகள் உண்டு என்ன காமினேஷன் என்று யாருக்கும் தெரியாது


J.Isaac
மே 17, 2024 14:51

மருத்துவ தீவிரவாதம்


Syed ghouse basha
மே 17, 2024 14:16

பாதிப்பில்லாமல் நன்மை அடைந்தவர்கள் பஜக மட்டுமே ஏனென்றால் அவர்கள் தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை வாங்கிக்கொண்டார்களே


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 17, 2024 13:09

ஆங்கில மருத்துவத்தில் அனைத்து மருந்துகளும் பக்க விளைவு உண்டு பக்க விளைவு இல்லாத மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை ஆயுர்வேத மருத்துவத்தில் மட்டுமே பக்க விளைவுகள் கிடையாது அவசர நேரத்தில் ஆங்கில மருத்துவம் தவிர்க்க முடியாதது சிலர் பாதிக்கப்பட்டாலும் பலர் காப்பாற்ற படுவார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் அவசர கால சிகிச்சை கிடையாது


rsudarsan lic
மே 17, 2024 11:52

ஆக இன்னொரு கொரோனாவுக்கு தயாராவோம் செத்து மடிவோம் சீனாவுக்கு சிவப்புக்கொடி kaattuvom


அப்புசாமி
மே 17, 2024 11:04

பாதிப்பா... நாம ரொம்ப சேஃபு.


ஆரூர் ரங்
மே 17, 2024 10:41

கோவிட் 19 தடுப்பூசி வகைகள் எல்லாமே அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி பெற்று செலுத்தப்பட்டன. பெருந்தொற்றால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது இது போன்ற சிறுசிறு பக்க விளைவுகளை நினைக்கவே யாருக்கும் நேரமில்லை.( நாட்டு வைத்தியத்தில் பல பஸ்பங்கள் போன்றவற்றால் உலோக விஷத்தன்மை சேர்வதாக அறிவியல் சொல்கிறதாம். அதற்கு என்ன செய்வது? ). எனவே தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளை பெரிதாக்கி செய்தி வெளியிட வேண்டாம். மருத்துவம் படிக்காதவர்கள் குறையும் கூற வேண்டாம்.


enkeyem
மே 17, 2024 10:25

அலோபதி மருந்துகள் எல்லாமே பின் விளைவுகள் கொண்டவைகள் தான் இதையெல்லாம் பூதாகரமாக்கி பாமர மக்களை பீதியடையச் செய்வதே இந்த மீடியாக்கள் தான்


Ramesh Sargam
மே 17, 2024 11:31

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை


duruvasar
மே 17, 2024 10:24

வலி மாத்திரைகளை உட்கொள்வதால் லிவரும், ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவதால் வயிற்றின் உட்சுவராகள் பாதிக்கப்படுமென தெரிந்துதான் உபயோகப்படுத்தப்படுகிறது எல்லா அலோபதி மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு மூட்டுவலிக்கு கொடுக்கப்படும் ஊசி மருந்தின் பக்கவிளைவு பற்றி தெரிந்துதான் ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை