மேலும் செய்திகள்
யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்ப்பு
2 hour(s) ago
மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்
3 hour(s) ago
32,000 ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைத்தது எப்படி?
3 hour(s) ago
சோழதேவனஹள்ளி: பிரபலமான, 'யு- டியூபர்' தற்கொலை செய்து கொண்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.பெங்களூரு டி.தாசரஹள்ளி மஞ்சுநாத் நகரில் வசித்தவர் மஞ்சுநாத், 43. யு- டியூபரான இவர் சமூக விஷயங்கள் தொடர்பாக, சமூக வலைதளங்களில் லைவ் வீடியோ பேசி வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் வெளியே சென்றார். இரவு வரை வீட்டிற்கு திரும்பி வரவில்லை.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மஞ்சுநாத்தை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று காலை சோழதேவனஹள்ளி பகுதியில் உள்ள, நீலகிரி மரத்தோப்பில் உள்ள மரத்தில் மஞ்சுநாத் துாக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் மஞ்சுநாத் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.ஆனாலும், 'மஞ்சுநாத்தை மர்ம நபர்கள் கொலை செய்து துாக்கில் தொங்க விட்டிருக்கலாம்' என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோழதேவனஹள்ளி போலீசிலும் புகார் அளித்தனர். விசாரணை நடக்கிறது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago